நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடி வரும் சூழ்நிலையில் அடுத்ததாக அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.
இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கும் தொடர்புடைய வகையில் இருக்கும் என நியூசிலாந்து அணியின் தேர்வாளர் கூறியிருக்கிறார்.
இலங்கை நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது நியூசிலாந்து அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இதற்கான கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான மிச்சல் சாண்ட்னர் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
நாதன் ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாடும் ஆறு வீரர்களும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்நியூசிலாந்து அணியின் தேர்வாளர் சாம் வெல்ஸ் கூறும்போது “இந்த சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடருக்கான கட்டமைப்பின் ஒரு பகுதி ஆகும். மேலும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டும் இந்த அணியை தேர்வு செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இந்தத் தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க:161 ரன்.. போராடி தோற்ற பங்களாதேஷ்.. இலங்கை அரையிறுதிக்கு தகுதி.. இந்திய அணியுடன் ஆட போவது யார்? – எமர்ஜிங் ஆசியா கப் 2024
நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி201 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (வாரம்), ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.