இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இன்னும் 74 ரன்கள் மற்றும் ஒரு சதம் எடுக்கும் பொழுது விராட் கோலி 2 முக்கியமான வரலாற்று சாதனைகளை படைப்பார்.
இந்த ஆண்டு இந்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி முதல் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது. 30 வருடங்களுக்குப் பிறகு இந்த டெஸ்ட் தொடர் 4 போட்டிகளில் இருந்து ஐந்து போட்டிகளாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி
விராட் கோலி விளையாடும் முறைக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா சூழல் மிகவும் உகந்ததாக இருந்து வந்திருக்கிறது. பேட்டிங் ஃபார்ம் தற்சமயம் சுமாராக இருந்தாலும் கூட தனக்கு சரியான சூழ்நிலையில் அவரால் மீண்டும் சிறப்பாக வந்து விட முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களே நம்புகிறார்கள். எனவே இந்த தொடரில் விராட் கோலி மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இதுவரை ஆஸ்திரேலியாவில் விராட் கோலி 6 டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். இன்னொரு இந்திய வீரரான முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலியா மண்ணில் 6 டெஸ்ட் சதங்கள் நடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் ஒரு டெஸ்ட் சதம் அடிப்பதின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார்.
தற்போது விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் vமொத்தம் 70 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 3,426 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் இன்னும் 74 ரன்கள் எடுப்பதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக சாதனை படைப்பார். மேலும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள்:
விராட் கோலி – 6
சச்சின் டெண்டுல்கர் – 6
சுனில் கவாஸ்கர் – 5
விவிஎஸ் லக்ஷ்மன் – 4
இதையும் படிங்க : விராட் கோலி வேண்டாம்.. ஆர்சிபி அணிக்கு இவரை கேப்டன் ஆக்குங்க.. சிறந்த எதிர்காலம் இருக்கு – ராபின் உத்தப்பா பேட்டி
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
விவியன் ரிச்சர்ட்ஸ் – 106 இன்னிங்ஸ் – 4529 ரன்கள்
டெஸ்மெண்ட் ஹேய்ஸ் – 132 இன்னிங்ஸ் – 4238 ரன்கள்
விராட் கோலி – 70 இன்னிங்ஸ் – 3,426 ரன்கள்
பிரையன் லாரா – 87 இன்னிங்ஸ் 3370 – ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் – 84 இன்னிங்ஸ் – 3300 ரன்கள்