3 பேர் இந்திய அணிக்கு விளையாடலனா.. பாகிஸ்தான் சும்மா தோற்கடிக்கும் – பாக் தன்வீர் அகமத் சவால்

0
227
Tanvir

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இருப்பார்கள் என்பது நிதர்சனம். இந்த நிலையில் சில வீரர்கள் இல்லை என்றால் இந்திய அணியை பாகிஸ்தான அணி எளிதாகத் தோற்கடிக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் கூறியிருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி தோற்ற காரணத்தினால், உடனடியாக இந்திய அணி குறித்தான விமர்சனங்கள் வெளியில் நிறைய பரவி இருக்கிறது. இந்திய அணி எளிதாக வீழ்த்தக்கூடிய அணிதான் என இலங்கை பாகிஸ்தான் தரப்பிலிருந்து நிறைய பேச்சுகள் வருகிறது.

- Advertisement -

குறிப்பாக இந்திய கிரிக்கெட் வெள்ளை பந்து வடிவத்தில் நிறைய மாற்றங்களை புதிய வீரர்களைக் கொண்டு சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக சில பரிசோதனைகளை செய்ய வேண்டிய இடத்திலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் இந்திய அணியை குறித்து மிக குறைவான மதிப்பீட்டை சிலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இது பற்றிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் பேசும்போது “எதிர்காலத்தில் இந்திய பேட்டிங் வரிசைக்கு என்ன நடக்கும் என்பதை நீங்கள் இப்போது பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவின் பவுலிங் யூனிட் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால் பேட்டிங் யூனிட் அப்படி இல்லை. இந்திய பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தவிர மற்றவர்கள் புதியவர்களாக இருக்கிறார்கள். விராட் கோலியால் எதிர்காலத்தில் இந்திய பேட்டிங் வரிசையை முன்னே எடுத்துச் செல்ல முடியாது.

- Advertisement -

இந்தியா உள்நாட்டில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் எடுக்கலாம். ஆனால் சீம் மற்றும் ஸ்விங் கண்டிஷனில் இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்திய அணி இலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க : சோசியல் மீடியாவில் வந்தது உண்மையா.. அப்படிப்பட்ட மோசமான நிலையில் தான் இருக்கிறாரா? – வினோத் காம்ப்ளி வெளியிட்ட தகவல்

இதனால் முதலில் உங்களுடைய சொந்த ஆட்டத்தை பார்த்துவிட்டு பிறகு பாகிஸ்தான் அணியை பற்றி நீங்கள் பேசுங்கள். ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் பும்ரா இல்லையென்றால் பாகிஸ்தான அணி இந்திய அணியை வெகு எளிதில் வீழ்த்தும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -