அபிஷேக் ஹெட் சும்மா பேட்ட சுத்தாம இதை செய்யணும்.. விராட் கோலி கிட்ட இதுதான் பெரிய பிரச்சனை – இஷான் கிஷான் பேட்டி

0
5
Ishan

நேற்று 19வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷான் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அபிஷேக் ஷர்மா ஹெட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என முக்கிய மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்டது. ஆனாலும் கூட இஷான் கிஷான், ஹென்றி கிளாசன் மற்றும் அனிகெட் வர்மா ஆகியோர் அதிரடியால் 201 ரன்கள் பிடித்தது. பவுலிங் யூனிட் பலவீனமாக இருந்ததால் தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது

இந்த போட்டியில் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் கேப்டன் பொறுப்பை ஏற்று வந்தார். டி20 உலக கோப்பை தொடரில் சிறந்த பார்மில் இருந்த அவர் அதை அப்படியே இந்த போட்டியிலும் தொடர்ந்தார். வெறும் 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். ஆனாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்த போட்டி குறித்து பேசிய இஷான் கிஷான் “நாங்கள் முதலில் விளையாடும் பொழுது ஆடுகளம் நான்கு ஓவர்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அடுத்து அவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இது எங்களுக்கு கொஞ்சம் பின்னடைவாக அமைந்துவிட்டது”

- Advertisement -

விராட் கோலியிடம் சிக்கல்

“ஆரம்பத்திலேயே விக்கெட் சரிவு வராமல் இருக்க நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி கணித்து விளையாட வேண்டும். எங்களுடைய டாப் ஆர்டர்கள் அடுத்த முறை இதை பார்த்து விளையாடுவது முக்கியமாக இருக்கிறது. நாங்கள் சீக்கிரம் விக்கெட் இழந்து இருந்தாலும் 200 ரன்கள் எடுத்தது நம்பிக்கையை கொடுக்கிறது”

இதையும் படிங்க : டீம்ல இடத்துக்காக இருக்கக் கூடாது.. தோனியை வம்பு இழுத்தாரா விராட் கோலி?.. போட்டி முடிந்ததும் நடந்தது என்ன?

“விராட் கோலியை பொறுத்தவரையில் ஆரம்பத்திலேயே அவரை அவுட் செய்ய முடியாவிட்டால் பிறகு அவர் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் கடினம். நாங்கள் அடுத்த போட்டியில் சிறப்பாக திருப்பி வருவோம் என்பது உறுதி” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -