டீம்ல இடத்துக்காக இருக்கக் கூடாது.. தோனியை வம்பு இழுத்தாரா விராட் கோலி?.. போட்டி முடிந்ததும் நடந்தது என்ன?

0
4
Virat

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்ததும் பேசிய விராட் கோலி தோனியை மறைமுகமாக பேசினாரா? என்பது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

நடப்பு 19 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆர்சிபி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் விராட் கோலி 38 பந்தில் ஆட்டம் இழக்காமல் 69 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து வைத்தார்.

- Advertisement -

முக்கிய கேள்வி

தற்போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். எனவே அவருக்கு தேவையான போட்டி பயிற்சி கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இது அவரது ஆட்டத்திறனை பாதிப்படைய வைக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

எனவே நீண்ட ஓய்வுக்குப் பிறகு வருவது விளையாடுவதற்கு எப்படி இருக்கிறது என்பது குறித்தான கேள்வி விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. நல்ல ஓய்வுக்குப் பிறகு திரும்பி வருவதால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது, இது விளையாடுவதற்கு உதவியாகவே இருக்கிறது என்று விராட் கோலி கூறியிருந்தார்.

- Advertisement -

தோனியை விமர்சித்தாரா?

இந்த கேள்விக்கு தொடர்ந்து பேசிய விராட் கோலி ” ஒரு வீரராக அணியில் இடத்தை பிடித்து வைத்துக் கொள்வதற்கு மட்டுமே ஆடக்கூடாது. கடுமையாக உழைத்து அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார். அவருடைய இந்த பேச்சு தான் தோனியை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா? என்று மாறியுள்ளது.

இதையும் படிங்க : சன்ரைசர்ஸ் 200 இல்ல.. எவ்வளவு ஸ்கோர் எடுத்தாலும் அவங்களுக்கு பத்தாது.. பெரிய சிக்கலில் இப்போ மாட்டிக்கிட்டாங்க – ரவிச்சந்திரன் அஸ்வின்

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி முதல் இரண்டு வாரங்கள் கால் தசை பிடிப்பு காயத்தின் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிஎஸ்கே அணிக்கு அவர் விளையாட வேண்டிய தேவையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவரைத்தான் விராட் கோலி பேசி இருக்கிறார் என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

- Advertisement -