இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் இதன் முதல் போட்டியில் நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் திலக் வர்மா ஒரு புதிய உலக சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி, அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதற்குப் பிறகு சர்வதேச டி20 அணியில் இடம் பெற்ற திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மிடில் ஆர்டரில் இறங்கும் வரை ஓரளவு விளையாடிய திலக், அதற்குப் பிறகு கேப்டன் சூரியகுமார் யாதவிடம் கோரிக்கையை வைத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கினார்.
களம் இறங்கி தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து தனது திறமையை உலக மக்கள் அனைவருக்கும் நிருபித்தார். 22 வயதான அவர் 107 மற்றும் 120 ரன்கள் என தொடர்ச்சியான இரண்டு சதங்கள் அடித்து தனது பேட்டிங் திறமையை பெரிய அளவில் நிரூபித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் நாளைய போட்டியிலும் திலக் வர்மா மீண்டும் மூன்றாவது வரிசையில் களமிறங்கினால் மீண்டும் ஒரு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அவர் சதம் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை திலக் வர்மா படைப்பார். ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் இந்திய அணியின் சஞ்சு சாம்சன், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தென் ஆப்பிரிக்காவின் ரிலே ரோசோவ் ஆகியோரின் சாதனை பட்டியலில் திலக் வர்மா ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்து இணைந்துள்ளார்.
இதையும் படிங்க:இன்னொரு தோனி வந்துட்டார்னு அப்பவே சொன்னேன்.. இப்ப உண்மை ஆகுது – ஐபிஎல் 2025 குறித்து பசித் அலி
எனவே இன்னும் ஒரு சதம் அடித்தால் உலகின் முதல் வீரராக மாறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். எனவே திலக் வர்மா நாளை இதை நிகழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இரண்டுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சம பலத்துடன் பொருந்துவதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.