இன்று சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான நாள்.. காத்திருக்கும் பெரிய சோகம் – முக்கிய தகவல்கள்

0
8
Sanju

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியாக மாறி இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் நான்கு டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் மிகவும் மோசமான முறையில் பேட்டிங் செய்திருக்கிறார். அதே சமயத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இசான் கிசான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அதிரடியாக விளையாடியிருக்கிறார். இது சஞ்சு சாம்சனுக்கு பெரிய அழுத்தமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

என்ன நடக்கிறது?

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சு சாம்சன் குறித்து அதிகம் பேச வேண்டாம் என்று கேட்டு இருந்தார். மேலும் ஒரு வீரரின் மன உறுதி என்பது அவருடைய கையில்தான் இருக்கிறது, நாங்கள் அவரை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் சஞ்சு சாம்சன் அவர்தான் மன உறுதியோடு இருந்து ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருந்தார். தங்களால் ட்ரெஸ்ஸிங் ரூமை நல்ல முறையில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்பதையும் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அவர் மீது வெளிப்படையாக அழுத்தம் இருக்கிறது என்பது தெளிவானது.

- Advertisement -

மிகப்பெரிய சோகம்

இன்றைய போட்டியில் சஞ்சு samsung ரன்கள் எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்பது உறுதியாகி விடும். ஆனால் இதில் இன்னொரு மிகப்பெரிய சோகம் உள்ளடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க : 15 ஓவர்.. அசால்டாக வென்ற இங்கிலாந்து.. இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் மீண்டும் சோகம் – முதல் டி20

சஞ்சு சாம்சன் இந்த முறை இந்திய அணிக்கு பிளேயிங் லெவனில் விளையாட முடியாவிட்டால், டி20 உலகக் கோப்பை முடிந்ததும் அவர் அணியை விட்டு வெளியேற்றப்பட்டு விடுவார். அவரைத் தொடர்ந்து புதிய வீரர்களை தேர்வு செய்வார்கள். அதே சமயத்தில் அவரால் இந்திய ஒரு நாள் அணியிலோ அல்லது டெஸ்ட் அணியிலோ இடம் பிடிக்க முடியாது. எனவே இன்று அவர் ரன்கள் எடுக்காவிட்டால் அவருக்கு இனி எப்போதும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்கின்ற பெரிய சோகம் அடங்கி இருக்கிறது.

- Advertisement -