15 ஓவர்.. அசால்டாக வென்ற இங்கிலாந்து.. இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் மீண்டும் சோகம் – முதல் டி20

0
8
England

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து அணி மழையின் நடுவே 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தற்போது வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

சுருண்ட இலங்கை

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 20 பந்துகளில் 23 ரன்கள் கமில் மிஸ்ரா 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

கடைசிக் கட்டத்தில் கேப்டன் சனகா போராடி 14 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சாம் கரன் மற்றும் ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மழையின் நடுவே வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாட வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பின் சால்ட் 35 பந்துகளில் 46 ரன்கள், ஜோஸ் பட்லர் 10 பந்துகளில் 17 ரன்கள், டாம் பாண்டன் 15 பந்துகளில் 29 ரன்கள், கேப்டன் ஹாரி புரூக் 18 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : எல்லாமே சாம்சன் கையில்தான் இருக்கு.. நாங்க இதுதான் செய்ய முடியும்.. இனிமே பேச வேண்டாம் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி

இந்த நிலையில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வந்தது. மேலும் போட்டியும் பதினேழு ஓவர்களாக ஏற்கனவே குறைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் இலங்கை அணி தோல்வி அடைந்து வருகிறது.

- Advertisement -