இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டால் புதிய துவக்க ஆட்டக்காரர் மற்றும் புதிய கேப்டன் யார் என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இன்று மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த கம்பீர் இந்திய அணி பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா?
ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் அல்லது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் அவர் எந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறித்தான உறுதியான தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் ரோகித் சர்மா விளையாடாவிட்டால் மிக முக்கியமான முதல் போட்டியில் துவக்க இடத்தில் அனுபவ வீரரை அனுப்புவதா? அல்லது புதிய வீரரை களம் இறக்குவதா? என்கின்ற குழப்பங்களும் நிலவி வருகின்றன. துணை கேப்டனாக பும்ரா இருந்தாலும் கில்லை புதிய கேப்டனாக உருவாக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்வதால், யார் ரோகித் சர்மா இடத்தில் இருப்பார்கள்? என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.
புதிய ஓபனர் மற்றும் புதிய கேப்டன் யார்?
இதுகுறித்து பதில் அளித்துள்ள கம்பீர் கூறும் பொழுது “தற்போது பும்ரா துணை கேப்டனாக இருக்கிறார். எனவே ரோகித் சர்மா விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்துவார்.தற்போதைக்கு ரோகித் சர்மா விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு கிடைப்பார் என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தெரிந்து கொள்ள போகிறோம்”
இதையும் படிங்க : வெறும் 14 ஓவர்.. புது இடத்தில் பட்டையை கிளப்பிய பட்லர்.. இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது
“தற்போது அணியில் வெளிப்படையாக துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார். மேலும் கேஎல் ராகுல் இருக்கிறார். எனவே ரோகித் கிடைக்கவில்லை என்றால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இருவரில் ஒருவரை நாங்கள் இதற்காக அழைத்துக் கொள்வோம். எங்களுக்கு ஆப்ஷன்கள் இருக்கிறது. ஆப்ஷன்கள் இல்லை என்பது கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.