மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மழையை குறிக்கிட்டால் கோப்பை யாருக்கு செல்லும் மற்றும் ஐசிசி விதிமுறை என்ன சொல்கிறது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலககோப்பைத் தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. வருகிற நவம்பர் 13 ஆம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை தொடரில் வீரர்கள் விளையாடியதை விட, மழை விளையாடியதுதான் அதிக சுவாரசியமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அரை இறுதிக்கு போவதே சந்தேகம் என்ற நிலையில் இருந்த இரண்டு அணிகளான சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணிகள் தற்போது இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன என்பதும் இந்த உலக கோப்பையில் நடந்த திருப்புமுனைகளில் ஒன்று.
மழையால் ஆட்டம் தடைப்பட்டால் கோப்பை யாருக்கு?
மெல்பர்ன் மைதானத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று சமீபத்திய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் மழை குறிக்கீடு அதிகமாக இருந்தால், அதிகபட்சம் போட்டி தலா 10 ஓவர்கள் வரை குறைக்கப்படும். அதற்கு கீழே குறைக்கப்படும் நிலை வந்தால் அந்நாளில் போட்டி நடத்தப்படாது.
இதற்கு என்று பிரத்தியேகமாக ரிசர்வ் செய்யப்பட்ட நாளில் மீண்டும் ஒருமுறை இறுதி போட்டி நடைபெறும். இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நவம்பர் 14ஆம் தேதி(திங்களன்று) ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கிறது.
அன்றும் மலையின் குறுக்கீடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், போட்டி அதிகபட்சம் 10 ஓவர்கள் வரை குறைக்கப்படலாம். ஆனால் பத்து ஓவர்கள் நடத்த சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டால், கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.
ஐசிசி விதிமுறையின் படி இதுதான் சாத்தியமாகும்.