மன்னிச்சிடுங்க விராட்.. சோகத்துக்கு தயாராகுங்க.. பஞ்சாப் கோப்பையை திருட போகுது – ஆஸி முன்னாள் கேப்டன் பேச்சு

0
312
Healy

இன்று 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் ஹீலி தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கிறது. இதுவரையில் இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பதால், இன்று ஒரு புதிய அணி ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியன் ஆகப்போவது உறுதியாகி இருக்கிறது!

- Advertisement -

ஆர்சிபியின் கணிப்பு சாதகம்

இந்த இறுதிப் போட்டிக்கான கணிப்பில் ஆர்சிபி அணிக்கு அதிகபட்ச வெற்றி சதவீதம் கிடைத்திருக்கிறது. அவர்களுடைய பௌலிங் யூனிட் வலிமையாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் பஞ்சாப் மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் பெரிய வெற்றி பெற்று வருவதால், அந்த அணி அதிகபட்ச நம்பிக்கையோடு இருப்பதாகவும் அதனால் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சிலர் கணிப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பல முன்னாள் வீரர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி அணியை ஆதரிக்கிறார்கள். ஆனால் இயான் ஹீலி இதற்கு எதிரான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் திருடப் போகிறது

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இரண்டு அணிகளுமே இதுவரையில் கோப்பையை வெல்லவில்லை என்கின்ற காரணத்தினால் போட்டியில் ஒரு கட்டத்தில் பீதி அடையும். இவ்வளவு அருகில் வந்திருக்கின்ற காரணத்தினால் ஆர்சிபி வெல்வதற்கு போராடும். எனவே அந்த அணிக்கே கோப்பையை வெல்ல வேண்டிய அதிக அழுத்தம் இருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் விளையாடிய விதத்தால் அவர்கள் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் பஞ்சாப் அணி அவர்களிடமிருந்து கோப்பையை திருட போகிறது”

இதையும் படிங்க : படிதாரை வச்சிக்கிட்டு இதை கேக்குறீங்களே.. தனியா வாங்க இதுக்கு பதில் சொல்றேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

“நான் விராட் கோலிக்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு முறை கோப்பையை தவறவிடும்பொழுதும், அவர் தவறவிட்டதாகவே கருத்து உருவாகிறது. அவர் அந்த அணியின் முகமாக இருப்பதால் இப்படி நடக்கிறது. எனது மீண்டும் ஒருமுறை விராட் கோலி கோப்பையை இழந்து விட்டார் என்று சொல்லப்படும். எனவே இந்த கோப்பையை வெற்றி பெறுவதற்கு விராட் கோலி அந்த அணிக்கு முக்கியமாக விளையாட வேண்டும். எனவே அழுத்தம் அவர் மீதும் அதிக அளவில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -