“இவர் மட்டும் ஃபிட்டா இருந்தா.. எங்களை எந்த டீமாலும் தடுக்க முடியாது!” – இர்பான் பதான் சூப்பர் அலசல்!

0
3560
Irfan

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வெற்றி எந்த அளவுக்கு அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்குமோ, அதே அளவுக்கு இந்திய அணியின் ரசிகர்களுக்கும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய இந்திய அணியின் வெற்றியை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் இன்று கொண்டாடிக் கொண்டோம் இந்திய வீரர்களை பாராட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து முன்னாள் வீரர்களின் நிறைய பாராட்டு செய்திகளை ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். போட்டியில் வெளியில் அதிகம் தெரிந்தது அவர்கள்தான்.

ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் பற்றி பெரிதான பேச்சுகள் இயங்கும் வெளியில் இல்லை. தற்பொழுது இவர்கள் குறித்து இர்பான் பதான் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நிச்சயமாக பும்ராவை விட சிறந்த பந்துவீச்சாளர் உங்களுக்கு கிடைக்க மாட்டார். அதேபோல் அவர் போல அனுபவமான பந்துவீச்சாளரும் உங்களுக்கு கிடைக்க மாட்டார். அவர் ஃபார்மில் இருக்கிறார். இந்த ஆடுகளங்களையும் நிலைமைகளையும் நிச்சயம் நன்கு அறிந்தவர். மேலும் அதற்கேற்ப தனது பந்துவீச்சை எப்படி சரி செய்வது என்பதும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவர் மார்ஸை செட்டப் செய்து அவுட் செய்தார். அதற்கு முன் அவருக்கு இன்ஸ்விங் வீசினார். அடுத்து அவுட் ஸ்விங் வீசுவது போல பேட்ஸ்மேனுக்கு தோன்றவைத்து, பந்தை நேராக வீசி எட்ஜ் எடுக்க வைத்தார். விராட் கோலி அதை மிக அருமையாக கேட்ச் எடுத்தார். முழு உலகக்கோப்பைகளும் பும்ரா உடல் தகுதியுடன் இருந்தால் எங்களை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

சிராஜ் வீசிய முதல் பந்தில் பவுண்டரி கொடுத்தார். உடனே அவர் தனது தவறை சரி செய்தார். அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக ஸ்டம்ப்பில் வீச முயற்சி செய்தார். மேலும் அவரது லென்த்தையும் பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.

உலகக் கோப்பையில் சிராஜ் தனது முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. அவர் லென்த்தை மிக விரைவாக கண்டறிந்து, அதைப் பின்னுக்கு இழுத்து சரி செய்து சிறப்பாக வீசினார். இறுதியாக அவருக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!