தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற கிடைத்த அருமையான வாய்ப்பை தவற விட்டு 60 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன் கிழமை தொடங்கியது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 357 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பவுமா 86 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிக்கன் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. பின்னர் லூயிஸ் 35 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவருக்குப் பிறகு கேப்டன் பிராத்வைட் 35 ரன்கள் வெளியேறினாலும் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கார்டி 42 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் 173 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற ஓரளவு நல்ல நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்குப் பிறகு மேற்கொண்டு 60 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை அநியாயமாக பறி கொடுத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விதமாக ஹாஜ் 25 ரன்கள், ஹோல்டர் 36 ரன்கள் என இறுதி கட்டத்தில் ஓரளவு அதிரடியாக விளையாடிய வாரிகன் 32 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 35 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியினால் ஓரளவு வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிடத்தக்க ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இழக்க ரன்களில் வெளியேறினார்கள்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. பந்துவீச்சு தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் மகாராஜ் சிறப்பாக செயல்பட்டு நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்குப் பிறகு ரபாடா மூன்று விக்கெட்டுகளும், இங்கிடி மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க:இந்தியா ஆஸி டெஸ்ட்.. 6 மடங்கு இதை அதிகம் பண்ணிட்டாங்க.. இந்த முறை வேற மாதிரி மாஸ் பண்ண போறோம் – நிக் ஹாக்லி பேட்டி
பிறகு 124 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்களில் 30 ரன்கள் அடித்திருந்தபோது நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு நாள் மீதம் இருக்கும் நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடிவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது