டி20 உலகக் கோப்பை 2024

கோலி ரோகித் ஒருத்தர் டி20 உ.கோ-ல இப்ப இருந்திருக்க மாட்டாங்க.. நடந்த விஷயம் இதுதான் – சேவாக் பேட்டி

இந்திய அணி நாளை நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து இதே அணியின் முன்னால் வீரர் விரேந்தர் சேவாக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய டி20 அணி உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடருக்கு 14 மாதங்கள் கழித்து கேப்டனாக ரோஹித் சர்மாவும் மூன்றாவது இடத்தில் பேட்ஸ்மேனாக விராட் கோலியும் திரும்பி வந்தார்கள்.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் வீரேந்தர் சேவாக் ” இந்த உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்கும் எந்த மூத்த வீரருக்கும் இது தங்களது கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்கின்ற எண்ணம் இருக்கும். மேலும் அவர்களது மனதில் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வென்று இருந்தால், தற்போது டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லை விராட் கோலி இருவரில் ஒருவர் இருந்திருக்க மாட்டார்கள். அப்படி வெல்ல முடியாத காரணத்தினால், அணிக்காகவும் தங்களுக்காகவும் ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கின்ற பசி அவர்களிடம் இருக்கிறது.

இதையும் படிங்க :இன்று பைனலிலும் மிரட்டும் மழை.. ரிசர்வ் டே இருக்கா?.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள்

இது இருவருக்கும் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். இந்த முறை அவர்கள் வெற்றி பெற்றால், இருவருமே வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவங்களில் இருந்து சீக்கிரம் ஓய்வை அறிவிக்கலாம். அதே சமயத்தில் அவர்களுக்கு உடல் தகுதி மற்றும் செயல் திறன் இருந்தால் அவர்கள் தாராளமாக தொடர்ந்து விளையாடலாம்.இன்னும் ஒரு உலகக் கோப்பையில் கூட அவர்களைப் பார்க்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts