இன்று பைனலிலும் மிரட்டும் மழை.. ரிசர்வ் டே இருக்கா?.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள்

0
279
T20iwc2024

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் நாளை பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான மைதானம் மற்றும் ஆடுகளபபள்ளி விவரங்கள், மேலும் வானிலை அறிக்கை தொடர்பாக பார்க்கலாம்

இறுதிப்போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரையில் எட்டு போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருக்கிறார். குறைந்தபட்சமாக அமெரிக்கா 112 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த மைதானத்தின் ஆடுகளத்தை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு என இரண்டிலுமே வேரியேஷன்கள் கொண்டு வீசப்படும் போது மட்டுமே தாக்கம் இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சராசரியான பவுன்ஸ் உண்டு. சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பந்து பெரிதாக திரும்பாது. எனவே அவர்கள் நிச்சயம் வேரியேஷன் மூலம்தான் விக்கெட் எடுக்க முடியும்.

இந்த மைதானத்தில் இதுவரையில் முதலில் பேட்டிங் செய்த அணி 19 முறை வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 11 முறை வெற்றி பெற்று இருக்கிறது. பொதுவாக இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது சரியானதாக இருந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த போட்டி நாளை சனிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெறும். இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரண்டு நாளிலும் கூடுதலாக 190 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் போட்டியை நடத்தி முடித்துக் கொண்டால், போட்டி அடுத்த நாளுக்கு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவ பைனல்ல ஓடவிட இத செய்யுங்க.. அந்த யூஸ்லெஸ் ஐடியா வேணாம் – தெ.ஆ-க்கு ரிக்கி பாண்டிங் ஐடியா

இப்பொழுது ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் செய்தியாக இறுதிப் போட்டிக்கான சனிக்கிழமை மற்றும் ரிசர்வ் டேவுக்கான ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாளிலுமே மழை அச்சுறுத்தல் 60% இருக்கிறது. வெயில் 26 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனாலும் மழை குறுக்கீடு இரண்டு நாட்களிலுமே உண்டு. ஒருவேளை போட்டி இரண்டு நாட்களிலும் நடைபெறாமல் போனால், இரண்டு அணிகளுக்குமே கோப்பை பகிர்ந்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -