நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால், மகி பாய் வருவதற்காக நான் அவுட் ஆக ரசிகர்கள் காத்திருப்பார்கள் – ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா!

0
9528
Jadeja

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிளே ஆப் சுற்றுக்கான முக்கியப் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் எட்டு விககெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளை 12 ஆட்டத்தில் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்து பிளே ஆப்ஸ் வாய்ப்பில் மிக வலிமையான இடத்தில் சென்னை இருக்கிறது.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும்பொழுது 16 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 21 ரன்கள், பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் தந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் ரவீந்திர ஜடேஜா.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது வென்று பேசிய ரவீந்திர ஜடேஜா “ஒரு ஸ்பின்னராக பந்து நன்றாக ஸ்பின் ஆவதும் ஹோல்ட் ஆவதும் நன்றாக உணர்கிறேன். நாங்கள் இங்கேயே பயிற்சி செய்கிறோம். எனவே எங்களுக்கு இங்கு எது சரியான லைன் லென்த் என்று தெரியும்.

இங்கு விளையாட வரும் விசிட்டிங் அணிகளுக்கு இங்குள்ள நிலைமைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள நேரம் தேவை. நாங்கள் எங்கள் ஹோம் கண்டிஷனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அணியில் எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்கிறார்கள். நாங்கள் கூட்டாக இருந்தும் பணியைச் செய்து வருகிறோம்.

மகி பாய்க்கான உற்சாக முழக்கங்களை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால், மகி பாய் வருவதற்காக, அவர்கள் நான் அவுட் ஆக வேண்டும் என்று காத்திருப்பார்கள்!” என்று கூறி இருக்கிறார்!