அர்ஜுன் டெண்டுல்கரை விளையாட வைப்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மஹேலா ஜெயவர்த்தனே

0
3706
Mahela Jayawardene about Arjun Tendulkar

ஐபிஎல் தொடர் வரலாற்றை ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சுமாராக விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியில் நிறைய பிரச்சனை உள்ளது. பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் அந்த அணி தோல்வி அடைந்தது.

அந்த அணி கடைசியாக விளையாடிய சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி கண்டது. அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் ஸ்பின் பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போட்டியில் மிக அற்புதமாகவே அவர் விளையாடினார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு இளம் வீரர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். ஐபிஎல் வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய நிறைய இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கின்றனர்.

அதன்படி குஜராத் அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கின்ற போட்டியில் இந்திய அணியில் மற்றொரு இளம் வீரர் களமிறங்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றி கிட்டும் வகையில் காம்பினேஷன் இருக்க வேண்டும்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ளார்.”அணியில் நிறைய வீரர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் எங்களுக்கு சாய்ஸ் தான். போட்டியில் வெற்றி பெறும் வகையில் சரியான வீரர்களை தேர்வு செய்து களம் இறங்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் அதை கவனத்துடன் கையாள வேண்டும்.
அணியில் வீரர்களின் காம்பினேஷன் வெற்றி பெற்றுத் தரும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
காம்பினேஷன் சரியாக இருந்தால் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்குவார்

நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடப் போகிறார் என்கிற செய்தி கசிந்தது. இது சம்பந்தமாக கேட்கையில், “இதற்கும் அதே பதில் தான். காம்பினேஷன் சரியாக வந்து அமைந்தால் நிச்சயமாக அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்குவார்” என்று மஹேல ஜெயவர்தனே கூறியுள்ளார்.

நாளை குஜராத் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.