6 ரன் 3 விக்கெட்.. தொடரும் நடராஜன் மேஜிக்.. பிளே ஆப் சென்ற திருப்பூர்.. வெளியேறிய திருச்சி அணி.. டிஎன்பிஎல் 2024

0
338

நடப்பு டிஎன்பிஎல் தொடரின் 26ஆவது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணியும், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் மோதிய போட்டியில் திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற 26வது போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. தொடக்க விக்கெட்டுகள் விரைவாகவே வெளியேற ஏழு ஓவர்களில் 67 ரன்களுக்குள் ஆறு விக்கெட் இழந்த திருப்பூர் அணியை பஃப்னா மற்றும் கணேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் உயர உதவினார்கள்.

- Advertisement -

மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன பப்னா 35 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரர் கணேஷ் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதனால் திருப்பூர் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. திருச்சி அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் டேவிட்சன் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி களம் இறங்கியது. 31 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிர்மல் குமார் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து விளையாட, மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொற்ப ரன்களில் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிர்மல் குமார் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

32 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மூன்று பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் குவித்து 46 ரன்கள் விளாசி நிர்மல் குமார் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு திருச்சி அணி தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதனால் 17 ஓவர்களிலேயே 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நிர்மல் குமாருக்கு அடுத்ததாக ராஜ்குமார் ஒன்பது பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 19 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:ரியான் பராக்குக்கு ஓவர் தர காரணம் இதுதான்.. உலக கோப்பையில் நடந்த ஒரு விஷயம் உதவுச்சி – சூரியகுமார் பேட்டி

பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் நடராஜன் மூன்று ஓவர்களில் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அஜித் ராம் மூன்று விக்கெட்டுகளும் ரவி ஸ்ரீனிவாசன் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். இதன் மூலம் திருப்பூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் சென்னை, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -