ஐசிசி உலக டெஸ்ட் டீம் 2022; ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்!

0
1045
ICC

ஐசிசி வருடம் தோறும் புதிய ஆண்டின் முதல் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு உலக அணிகளை அறிவித்து வருகிறது!

இதன்படி நேற்று உலக டி20 அணியை ஐசிசி அறிவித்தது. இதில் விராட் கோலி சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மூன்று பேர் இந்தியாவில் இருந்து தேர்வு பெற்றார்கள்.

இந்த நிலையில் ஐசிசி இன்று கடந்த வருடத்திற்கான உலக டெஸ்ட் அணியை அறிவித்து இருக்கிறது. அதில் இந்தியாவிலிருந்து ஜஸ்ட்பிரித் பும்ரா முதல் கொண்டு விராட் கோலி வரை எந்த இந்திய நட்சத்திர வீரர்களும் இடம் பிடிக்கவில்லை.

இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் மட்டுமே ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியில் இருந்து நான்கு பேரும் இங்கிலாந்து அணியில் இருந்து மூன்று பேரும் தேர்வாகி இருக்கிறார்கள்.

ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் அணி!

உஸ்மான் கவஜா
பிராத்வெயிட்
லபுசேன்
பாபர் ஆஸம்
பேர்ஸ்டோ
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
கம்மின்ஸ்
ரபாடா
நாதன் லயன்
ஆண்டர்சன்

இந்திய அணியில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டும் கடந்த ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தாலும், இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியான விஷயமே!