ஐபிஎல் 2025..தோனி வைத்த 10 நாள் செக்.. இறுதி முடிவு என்ன?. சிஎஸ்கே சிஇஓ வெளியிட்ட சூசக தகவல்.. முழு விபரம்

0
648

அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வருகிற 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விசுவநாதன் மகேந்திர சிங் தோனி விளையாடுவது குறித்து ஒரு முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய தோனி

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த தோனி அதற்குப் பிறகு தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண ஒரு வீரராக சிஎஸ்கே அணியில் விளையாடினார்.

இருப்பினும் தொடரின் பாதியில் ஏற்பட்ட முழங்காலின் காயம் காரணமாக அவரால் எஞ்சிய போட்டிகளில் சீராக விளையாட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை பொறுத்து எனது அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறிய மகேந்திர சிங் தோனி தற்போது ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை ஐபிஎல் நிர்வாகம் வழங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனி கூறியதாக தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

தோனி கூறிய தகவல்

அதில் அவர் கூறியிருப்பதாவது “சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் தோனி அதை எங்களிடம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சொல்கிறேன் என்று கூறினார். தோனி விளையாடுவார் என்று நாங்களும் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார். அதாவது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் உறுதியாக தோனி முடிவு செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:31 ஓவர் 234 ரன்கள்.. பேட்டிங்கில் மாஸ் காட்டிய இலங்கை அணி.. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஏமாற்றி பரிதாப தோல்வி

இருப்பினும் தோனி அடுத்து ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று கிரிக்கெட்டில் ரொம்ப நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி தோனி விளையாட சம்மதம் தெரிவித்தால் நான்கு கோடி ரூபாய்க்கு தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. எனவே தோனியின் இறுதி முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -