டாப் 10ல் வெளியேறிய பாபர்.. 3 இந்திய வீரர்கள் அசத்தல்.. ரூட் வாழ்நாள் சாதனை.. ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்

0
563
Root

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக புள்ளிகளை தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்றிருக்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதில் 2022 ஆம் ஆண்டிலிருந்து அரை சதம் அடிக்காத பாபர் அசாம் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் பின்னடைவு

பாபர் அசாம் கடந்த 15 டெஸ்ட் இன்னிங்ஸ் களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மிக மோசமான முறையில் அவருடைய பேட்டிங் செயல்பாடு இருந்தது.

இதன் காரணமாக தற்பொழுது பாபர் அசாம் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறியிருக்கிறார். சமீபத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்த அவர் தற்போது 712 புள்ளிகள் உடன் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முகமது ரிஸ்வான் மட்டுமே 720 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தில் தொடர்கிறார்.

- Advertisement -

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்

இந்த பட்டியலில் ரோகித் சர்மா 751 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்திலும், விராட் கோலி 737 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். அடுத்து இந்திய அணி தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், இவர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் டாப் 10ல் தொடரும்.

இந்த பட்டியலில் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கைந்து ஆண்டுகளாக கலக்கி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 922 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் ரேங்க் பட்டியலில் ஜோ ரூட் தன்னுடைய வாழ்நாளில் பெற்ற அதிக புள்ளிகளாக இது இருக்கிறது.

இதையும் படிங்க : நான் நல்லா விளையாடல ஒத்துக்குறேன்.. அடுத்த 10 டெஸ்ட் பாருங்க.. இதுல வேலை செய்திருக்கேன் – சுப்மன் கில் ஓபன் பேட்டி

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் டாப் 10 பட்டியல் :

ஜோ ரூட் – 922
கேன் வில்லியம்சன் – 859
டேரில் மிட்செல் – 768
ஸ்டீவன் ஸ்மித் – 757
ஹாரி புரூக் – 753
ரோஹித் சர்மா – 751
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 740
விராட் கோஹ்லி – 737
உஸ்மான் கவாஜா – 728
முகமது ரிஸ்வான் – 720

- Advertisement -