இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக், சக வீரர் ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் ஆகியோர் தரவரிசை பட்டியலில் சிறந்த இடங்களைப் பெற்றுள்ளனர்.
பிர்மிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ப்ரூக் 158 ரன்கள் எடுத்து 886 தரவரிசை புள்ளிகளைப் பெற்று, ஜோ ரூட்டை விட 18 புள்ளிகள் முன்னிலை பெற்று, மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு வாரம் முதலிடத்தில் ஹாரி புரூக் இருந்தார்.எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி கில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 150-க்கு மேல் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது மிக உயர்ந்த மொத்த ரன்களாக 430 ரன்களைப் பெற்றார். கில் 269 மற்றும் 161 ரன்கள் எடுத்து சாதித்தார்.இதன் மூலம் கில் 6வது இடத்தை பிடித்தார்.
இந்தத் தொடரை கில் 23-வது இடத்தில் தொடங்கினார்.ஐந்து போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது டெஸ்டில், தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 89 மற்றும் 69* ரன்கள் எடுக்க, ஆறு இடங்கள் முன்னேறி 39-வது இடத்தையும், ஜேமி ஸ்மித் 184* மற்றும் 88 ரன்கள் எடுத்து 16 இடங்கள் முன்னேறி முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப், ஒவ்வொருவரும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, பந்து வீச்சு தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டனர். சிராஜ் ஏழு விக்கெட்டுகளுடன் ஆறு இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், ஆகாஷ் தீப் 39 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பெற்றார்.
இதையும் படிங்க: இந்தியா இங்கிலாந்து 3வது டெஸ்ட்.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. அணிக்குள் வரும் தமிழக வீரர்
முல்டர் புலவாயோ டெஸ்டில் முல்டரின் 367* ரன்கள் விளாடி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனின் மிக உயர்ந்த ஸ்கோரை பெற்றார். இதன் மூலம் 34 இடங்கள் முன்னேறி தொழில் வாழ்க்கையில் சிறந்த 22-வது இடத்தைப் பெற்றார். அவரது மூன்று விக்கெட்டுகள் அவரை பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேற்றி 48-வது இடத்தையும், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தையும் பெறச் செய்தன.