ஐசிசி டி20 ரேங்கிங்: வெறும் 23 மேட்சில் நியூஸி பவுலர் நம்பர் ஒன்.. வருண் சக்கரவர்த்தி பின்னடைவு.. அதிரடி மாற்றங்கள்

0
27

ஐசிசி t20 தரவரிசைக்கான பட்டியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் நிகழ்ந்து இருக்கிறது. தற்போது ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அண்மையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 போட்டிகள் நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப்  என்பவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஐசிசி t20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஜேக்கப்  முதலிடத்தில் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியை முந்தினார்:

ஜேக்கப் மொத்தமாகவே 23 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். இதில் அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளிருக்கின்றார்.

மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி, நான்காவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித், ஐந்தாவது இடத்தில் ஹசரங்கா ஆகியோர் உள்ளனர். ஏழாம் இடத்தில் இந்திய வீரர் ரவி பிஷ்னாயும் பத்தாவது இடத்தில் ஆர்ஸ்தீப் சிங்கும் உள்ளனர்.ஜேக்கப்  நம்பர் ஒன் இடத்தை பிடித்ததன் மூலம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நம்பர் ஒன் இடத்தை நியூசிலாந்து பவுலர் ஒருவர் டி20 தரவரிசை பட்டியலில் பிடித்துள்ளார்

- Advertisement -

இந்திய வீரர்கள் எந்த இடம்:

இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி 5 போட்டிகளில் 249 ரன்கள் குவித்த டிம் செபர்ட்  தரவரிசையில் தற்போது புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார். வெல்லிங்டனில் நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் டிம் செபர்ட் 97 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ள அவர், பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. ரிஷப் பண்டை கடுமையாக சாடிய ஹர்பஜன்.. வழியை கண்டு பிடியுங்கள் என கோரிக்கை

இந்த பட்டியலில் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் திலக் வர்மா நான்காவது இடத்திலும், இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின்தங்கி 13வது இடத்தில் உள்ளார். டீம் செபர்ட் மற்றும் ஜேக்கப்  போன்ற வீரர்கள் அபாரமாக செயல்பட்டாலும் ஐபிஎல் தொடரில் இவர்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -