ஐசிசி தரவரிசை வெளியானது; உலகக்கோப்பை பைனலுக்கு முன்னேறாத சூரியகுமாரின் நம்பர்.1 இடத்திற்கு என்னாச்சு?- தரவரிசை பட்டியல்!

0
24242

உலக கோப்பை இறுதிப்போட்டி முடிவுற்றவுடன் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது ஐசிசி.

இந்த உலக கோப்பை தொடர் பல முன்னணி வீரர்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. உலககோப்பையில் இந்திய அணியை பொறுத்தவரை, சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார்கள்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் 239 ரன்கள் அடித்து மூன்று அரை சதங்களையும், அதேபோல் விராட் கோலி 296 ரன்கள் அடித்து நான்கு அரை சதங்களையும் தன்வசம் வைத்திருந்தார்கள்.

சூரியகுமாருக்கு அடுத்த இடத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இருக்கின்றனர்.

869 புள்ளிகள் இருந்த சூரியகுமார் யாதவ் இறுதி போட்டிக்கு முன்னேறாததால் 10 புள்ளிகள் குறைந்து 859 புள்ளிகளுடன் தொடர்ந்து பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 778 புள்ளிகளுடன் பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -

தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் இருந்து வந்த விராட் கோலி இரண்டு இடங்கள் பின்சென்று தற்போது 11 வது இடத்தில் இருக்கிறார்.

டி20 அணிகள் தரவரிசையில் 268 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 261 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பொருத்தவரை டி20 தரவரிசையில் எவரும் இல்லை. அதிகபட்சமாக 14வது இடத்தில் புவனேஸ்வர் குமார் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.