“ஐபிஎல் க்கு வந்த புது சிக்கல்” – டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ஐசிசி எடுக்க இருக்கும் கடுமையான நடவடிக்கை!

0
9115

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது டி20 கிரிக்கெட் ராஜ்ஜியம் செய்து வருகிறது . உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலும் ஒவ்வொரு டி20 லீக் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன . இது மட்டுமல்ல அது கிரிக்கெட் பிரபலமாகி கொண்டிருக்கும் நாடுகளிலும் கூட டி20 போட்டி தொடர்கள் நடைபெற இருக்கின்றன .

ஐக்கிய அரபு நாடான துபாயில் இந்த வருடம் பிரீமியர் லீக் டி20 தொடர் போட்டிகள் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் மேஜர் கிரிக்கெட் லீக் என்ற டி20 தொடர் நடைபெற இருக்கிறது . இவ்வாறு உலகெங்கிலும் டி20 போட்டி தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சர்வதேச கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது .

- Advertisement -

சமீபத்தில் கூட அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் தனது தேசிய ஒப்பந்தத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டை மட்டுமல்லாது உலகில் இருக்கும் மற்ற கிரிக்கெட் வாரியங்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .

இவ்வாறான டி20 லீக் தொடர்களின் ஆதிக்கம் தொடர்ந்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து உருவாகும் என்பதை உணர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்த மாதம் முதல் பிரான்சைஸ் முறையில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறது .

இது பற்றி அடுத்த மாதம் ஐசிசி இடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என இங்கிலாந்தைச் சார்ந்த பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது . இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி டி20 லீக் பிரான்சைஸ் ஒரு நாட்டின் வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் அந்த வீரருக்கான ஒப்பந்த தொகையை வழங்குவதோடு அவர் சார்ந்த கிரிக்கெட் வாரியத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் .

- Advertisement -

மேலும் எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் ஆடும் 11 வீரர்களில் நான்கு வெளிநாட்டு சர்வதேச வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் டி20 லீக் தொடர்களுக்கு கொண்டு வர இருக்கிறது ஐசிசி . சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் இந்த முடிவிற்கு உலகின் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன . இது போன்ற முடிவுகள் டி20 கிரிக்கெட்டில் இருந்து பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .