ஐசிசி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் முகமது சிராஜ் வென்றார். வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் கைப்பற்றினார். ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் அணிகளின் மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்ததற்காக ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.
சிராஜ், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இறுதி நாளில் ஓவல் டெஸ்ட் போட்டியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்த பந்துவீச்சு மூலம், நியூசிலாந்தின் மாட் ஹென்றி மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் ஆகிய வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்த விருதை வென்றார். சிராஜ், ஐந்தாவது போட்டியில் இறுதி நாளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளுடன் போட்டியை முடித்தார்.
சிராஜ் பெருமிதம்:
முதல் இன்னிங்ஸில் 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி தொடரை 2-2 என சமநிலையில் முடித்தது.சிராஜ் தனது அணியினர் மற்றும் பயிற்சியாளர் குழுவினருக்கு தனது வெற்றிக்கு பங்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இது குறித்து பேசிய முகமது சிராஜ், “ICC மாதத்தின் சிறந்த வீரர் விருது பெறுவது ஒரு சிறப்பு மரியாதை. ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி ஒரு மறக்க முடியாத தொடராக இருந்தது. மேலும் இது நான் பங்கேற்ற மிகவும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். முக்கியமான தருணங்களில், குறிப்பாக சில முக்கியமான பந்துவீச்சு மூலம் பங்களிக்க முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்திய அணிக்கு உழைப்பேன்:
“இங்கிலாந்து மண்ணில் பலமான பேட்டிங் வரிசைக்கு எதிராக பந்து வீசுவது சவாலானது. ஆனால் அது எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியது.இந்த விருது எனது அணியினருக்கும், ஊழியர்களுக்கும் என்னைப் போலவே சொந்தமானது. ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியான ஊக்கமும் நம்பிக்கையும் என்னை முன்னோக்கி செலுத்தியது.”
இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா ரேர் பீஸ்.. இந்த பையன எனக்கே ஆச்சரியமா இருக்கு.. இதான் பிளஸ் பாயிண்ட் – சேவாக் பாராட்டு
“இந்திய ஜெர்ஸியை அணியும் ஒவ்வொரு முறையும் கடினமாக உழைத்து எனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன்.” என்று சிராஜ் கூறினார். அயர்லாந்தின் ஆல்-ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முனீபா அலி மற்றும் நெதர்லாந்தின் சீம் பவுலர் ஐரிஸ் ஸ்வில்லிங் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதை வென்றார்.






