இனி பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன்களைக் குவிக்கலாம் – டி20ஐ கிரிக்கெட்டில் ஐசிசி அறிவித்துள்ள புதிய 2 விதிமுறைகள்

0
2162
ICC New Rules in T20I Cricket

2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 கிரிக்கெட் உலகெங்கும் நாளுக்கு நாள் ரசிகர்களை திரட்டிக் கொண்டே வருகிறது. தற்போது ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20ஐ போட்டிகளுக்கான விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

பந்துவீசும் அணி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அனைத்து ஓவர்களையும் வீசி முடிக்கவில்லையெனில் கேப்டன் அபராதம் செலுத்த நேரிடும். கடந்த சில காலங்களாக ஸ்லோ ஓவர் ரேட் பெரிய பிரச்சனையாக வலம் வருகிறது. முக்கியமாக பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிற்கவைக்க அதிக நேரம் செலவு செய்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஐசிசி புதிதாக ஓர் விதிமுறையை அமல்படுதியுள்ளது.

- Advertisement -

20 ஓவர்களை பூர்த்தி செய்ய பந்துவீசும் அணிக்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் குறைந்தது 19 ஓவர்கள் பந்துவீசி முடித்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்றிருக்கும் 5 வீரர்களில் ஒருவர் குறைக்கப்படுவார். இதனால் கடைசி சில ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு பவுண்டரிகள் விளாசி கூடுதல் ரன்கள் சேர்க்க வசதியாக இருக்கும். இவ்விதிமுறை வரவேற்கப்படுகிறது. இனிமேல் பந்துவீசும் அணி எச்சரிக்கையாக இருந்ததாக வேண்டும். இதன் மூலம் ஸ்லோ ஓவர் ரேட் கட்டுப்படுத்தப்படும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐசிசி அறிவித்த மற்றொரு விதி ஐ.பி.எல், தி 100 மற்றும் வேறு சில டி20 தொடர்களில் பின்பற்றப்படுகிறது. அதாவது ஒரு டி20ஐ இன்னிங்ஸ்க்கு இடையே இரண்டரை நிமிடங்கள் தண்ணீர் குடிப்பதற்காக இடைவேளை அளிக்கப்படும். இனிவரும் போட்டிகளில் அந்த இடைவேளை வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி முன்னரே தேர்வுசெய்துக் கொள்ளலாம். போட்டியில் மோதும் இரு அணிகளின் நிர்வாகமும் அதை முடிவு செய்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த 2 விதிமுறையும் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி அன்று ஜமைக்காவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து டி20ஐ போட்டியிலிருந்து பின்பற்றப்பட உள்ளது.

- Advertisement -