இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரோடு தனது ஓய்வு முடிவை அறிவித்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயன் ஸ்மித் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட்
நியூசிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்களது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான டிம் சவுதி இந்தத் தொடரோடு தனது ஓய்வினை அறிவித்திருக்கும் நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் 61.50 சராசரியில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அவரது செயல்பாடு தற்போது மோசமாக இருக்கும் நிலையில் அடுத்த போட்டி மட்டுமே அவரது இறுதிப் போட்டியாக இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் ஸ்மித் மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது எனவும் புதிய முயற்சியை செயல்படுத்த வேண்டிய நேரம் இது எனவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டிம் சவுதிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். அடுத்த டெஸ்ட் போட்டியை புதிய போட்டியின் தொடக்கமாக பயன்படுத்துவோம். அடுத்த சுழற்சியை தொடங்கும் நிலையில் நீண்ட சேவை செய்தவர்களுக்காக இந்த வாய்ப்புகளை விட்டு விடாதீர்கள். இதனால் டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்கள் பிரியாவிடைகளாக வழங்கப்படுவதில்லை. குறைந்த விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக குறைந்த செயல் திறனை கொண்ட வீரராக டிம் சவுதி சில காலமாக இருந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க :இஷான் கிஷானுக்கு பதிலா.. பில் சால்டை இதுக்குதான் வாங்கினோம்.. இந்த விஷயம்தான் காரணம் – ஆர்சிபி தினேஷ் கார்த்திக் பேட்டி
எனவே அவர் வெளியேறுவதற்கு இதுவே சரியான நேரம்” என்று கூறி இருக்கிறார். இயன் ஸ்மித் தற்போது இந்த கருத்தினை தெரிவித்து இருக்கும் நிலையில் நீண்ட காலம் நியூசிலாந்து அணிக்காக சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கும் ஒரு வீரருக்கு தகுதியான பிரியாவிடை வழங்கி கௌரவிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அடுத்த போட்டியில் சவுதி விளையாடுவாரா? அல்லது புதிய வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். டிம் சவுதி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 106 போட்டிகளில் விளையாடி 389 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.