இஷான் கிஷானுக்கு பதிலா.. பில் சால்டை இதுக்குதான் வாங்கினோம்.. இந்த விஷயம்தான் காரணம் – ஆர்சிபி தினேஷ் கார்த்திக் பேட்டி

0
257
Ishan Kishan and Dinesh Karthick

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் கலந்து கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை அணிக்குத் தேவையான வலுவான வீரர்களை எடுத்தது. அதில் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பெங்களூர் அணியின் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் இந்திய வீரர் இசான் கிஷானுக்கு பதிலாக பில் சால்டை எடுத்தது ஏன் என்பது குறித்து அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பில் சால்டை விடாப்பிடியாக வாங்கிய பெங்களூர்

கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்கத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான சூழ்நிலையில் இருந்தது. அதற்குப் பின்னர் அணிக்குத் தேவையான மாற்றங்களை செய்து பிளே ஆப் சுற்று வரை முன்னேறியது. இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்ற முடிந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட பெங்களூர் அணி 83 கோடி உடன் ஏலத்தில் நுழைந்தது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய நினைத்த பெங்களூர் அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ் ஹாஸில்வுட்டை 12.50 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பில் சால்டை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை அணியில் இருந்து வெளிவிடப்பட்ட நட்சத்திர இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிஷானுக்கு பதிலாக வெளிநாட்டு வீரர் பில் சால்டை அதிகமான தொகைக்கு வாங்கியது ஏன் என்பது குறித்து விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது. இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் அதற்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இசான் கிஷானை வாங்காததற்கு காரணம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரர் ஒருவரை பெங்களூர் அணிக்காக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் அவர்களால் 40, 50, 60 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க முடியும். எடுத்துக்காட்டாக பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் இதனை மீண்டும் மீண்டும் செய்து தங்களை நிரூபித்திருக்கிறார்கள். பில் சால்ட் ஒரு ஓவரில் ஆறு முதல் 8 ரன்களை 28 சதவீதத்திற்கும் மேல் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : கேஎல் ராகுல் மீது இதனாலதான் கோபமடைந்தேன்.. அவர் ரொம்ப நேர்மையான மனிதர் – லக்னோ அணி உரிமையாளர் பேட்டி

மேலும் 12 முதல் 15 ரன்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அடித்திருக்கிறார். நான்கு ஓவர்களில் ஒரு ஓவரில் 16 ரன்களுக்கு அதிகமாகவும், இரண்டு ஓவரில் ஒரு ஓவர் 12க்கும் அதிகமான ரன்கள் எடுத்திருக்கிறார். இந்திய வீரர்களை பொறுத்தவரை அதனைச் சிறிய அளவில் செய்திருக்கும் இசான் கிசானை மட்டுமே என்னால் நினைத்து பார்க்க முடியும். மேலும் இதுபோன்று மிக அதிரடியாக விளையாடக் கூடிய பவர் பெரிதாக இல்லாத நிலையிலேயே நாங்கள் அத்தகைய தேர்வுக்கு செல்லவில்லை” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

- Advertisement -