இந்திய கிரிக்கெட் வாரியம் 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான பிரான்சிசைஸ் டி20 லீக்காக இருக்கிறது. தற்போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மற்ற நாட்டு டி20 லீக்குகளில் அணிகளை வாங்குவதை தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா லெஜண்ட் இயான் சேப்பல் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.
மேலும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்து தொடரில் பிரேவ் சதர்ன் அணியின் பெரும்பாலான பங்குகளை ஐபிஎல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களாக இருக்கும் ஜிஎம்ஆர் குழுமம் வாங்க இருப்பதாகவும் பேச்சுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உலகெங்கும் நடக்கும் பிரான்சிஸைஸ் டி20 லீட்டுகளில் அணிகளை வாங்குவதை தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய லெஜன்ட் இயான் சேப்பல் கூறியிருக்கிறார். இதற்கான காரணங்கள் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இயான் சேப்பல் கூறும்பொழுது “ஐபிஎல் உரிமையாளர்கள் உலகெங்கும் இருக்கும் பல நாடுகளின் டி20 லீக்குகளில் அணிகளை வாங்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய வெற்றிகரமான போக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக உயர்தர கிரிக்கெட் வீரர்கள் இப்படியான அணிகளின் நீண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து விடுவார்கள். இது கிரிக்கெட் வாரியங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இலங்கை தொடர் தோல்வி.. இந்திய அணியை கிண்டல் செய்த வாகன்.. 12 வருடத்தை வைத்து பதிலடி தந்த வாசிம் ஜாஃபர்
கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைப்பதை விட, ஒரு அணிக்காக பல நாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாடி, ஐபிஎல் ஓனர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். பல நாடுகளில் கிரிக்கெட் நடத்த பணம் தேவைப்படுகிறது. ஐபிஎல் உரிமையாளர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. எனவே அவர்களால் உலகெங்கும் அணிகளை வாங்க முடிகிறது. கிரிக்கெட்டுக்கு நீண்டகால ஒரு செயல் திட்டத்தை உருவாக்காத கிரிக்கெட் நிர்வாகிகள் இதற்கான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.