இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளையும் முழுமையாக தோற்று தொடரை இழந்து, தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மோசமான வரலாற்றை உருவாக்கி இருக்கிறது.
இந்த தொடரில் பேட்டிங்கில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் முழுமையாக ஏமாற்றி இருக்கிறார்கள். அதே சமயத்தில் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இந்த நான்கு மூத்த வீரர்களின் செயல்பாடு சராசரியாக கூட அமையாததால் இந்திய அணி வரலாற்று கொள்கையை சந்திக்க வேண்டியதாக அமைந்திருக்கிறது.
இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தது நான்கு போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து இந்திய அணிக்கு நிலைமைகள் மாறும்.
ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டால், புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு ரோகித் சர்மா விராட் கோலி ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. தற்பொழுது ருதுராஜ், சாய் சுதர்ஷன் படிக்கல் ஆகியோரும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் வெளியில் காத்திருக்கிறார்கள்.
பிசிசிஐ வட்டாரத்தில் கசிந்த தகவல்
இது குறித்து வெளியான பிசிசிஐ தரப்பில் கசிந்த செய்தியில் “நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும். ஆஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி மிகப்பெரியதாகும். ஆஸ்திரேலிய தொடருக்கு ஏற்கனவே அணி அறிவிக்கப்பட்டு விட்டதால், அதில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது”
இதையும் படிங்க : தோனிக்காக சிஎஸ்கே-வில் ஆட.. சம்பளத்தை குறைக்க தண்ணி தூக்க ரெடியா இருந்தேன் – டேல் ஸ்டெய்ன் பேட்டி
“இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாவிட்டால், இந்திய அணியில் சூப்பர் சீனியர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர், அடுத்து இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் செல்லும் இந்திய அணியின் விமானத்தில் இருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலிய தொடரில் குறிப்பிடும் படி விளையாடினால் மட்டுமே இவர்கள் மேற்கொண்டு தொடர்வார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.