தோனி கேப்டன்ஷியில் இதையெல்லாம் மோசமா செய்யறார்.. ஆனா விமர்சிக்க மனசு வரல – கில்கிறிஸ்ட் பேட்டி

0
163
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கேப்டன்ஷியில் தடுமாற்றமாக இருக்கிறார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி இரண்டு ஓவருக்கு வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் களத்தில் அனுபவ வீரர்கள் ஜடேஜா மற்றும் தோனி இருந்தும் இதை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை. சிஎஸ்கே இறுதியாக இரண்டு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக பரபரப்பான போட்டியில் தோற்றது.

- Advertisement -

தோனியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சொதப்பல்

நேற்று தோனி 18 ஆவது ஓவருக்கு கலீல் அகமதுக்கு சென்றார். அந்த ஓவரில் அவர் 30க்கும் மேற்பட்ட ரன்கள் தந்தார். அதற்கு முன்பாகவே இரண்டு ஓவர்களுக்கு அவர் 32 ரன்கள் தந்து இருந்தார். இந்த நிலையில் அங்கு அன்சூல் காம்போஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் கொஞ்சம் சிக்கனமாக இருந்தார்கள். ஆனால் தோனி அவர்கள் இருவருக்குமே செல்லவில்லை.

மேலும் நேற்றைய போட்டியில் யாஸ் வீசிய லோ புல்டாஸ் பந்தில் தோனி எல்பிடபிள்யு ஆனார். ஆனால் பழைய தோனியாக இருந்திருந்தால் அந்தப் பந்தை நிச்சயம் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்திருக்க முடியும். மேலும் அவருடைய பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அதை செய்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனியை விமர்சிக்க விரும்பவில்லை

ஆடம் கில்கிறிஸ்ட் தோனி பற்றி பேசும் பொழுது ” நேற்று அவர் கலீல் அகமதுக்கு ஓவர் தராமல் இருந்திருக்க முடியும். அதற்கு முன்பாக பந்துவீசிய நூர் அகமத் சிறப்பாக இருந்தார். இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவிடம் அவர் சென்றிருக்கலாம். மேலும் நேற்றைய போட்டியில் கலீல் அகமதுவை விட அன்சூல் காம்போஜ் சிக்கனமாக இருந்தார். அவரை முயற்சி செய்து பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வருடமோ இல்லை அடுத்த வருடமோ மிகச் சிறந்தவராக இருந்த அவரை விமர்சனம் செய்ய எனக்கு மனம் வரவில்லை”

இதையும் படிங்க : ஆக்ரோஷமா ஆடுவது வேறு.. ஆனா இந்த ஸ்பெஷல் குணம் அந்த பையனை வேற உயரத்திற்கு கொண்டு போகும் – சிஎஸ்கே கோச்

“மேலும் நேற்று அவர் ஆட்டம் இழந்த பந்தை நிச்சயம் அவரால் அடித்திருக்க முடியும். அந்த பந்து லோ புல்டாஸ் பந்தாக இருந்தது. பழைய தோனியாக இருந்திருந்தால் நிச்சயம் அவர் ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக அதை சிக்ஸர் அடித்திருப்பார். அவரால் இப்பொழுது இதை எல்லாம் செய்ய முடிவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -