பிசிசிஐ யோசிக்காதிங்க .. 6வது வீரரா மயங்க் யாதவை அந்த லிஸ்டில சேருங்க – இயான் பிஷப் கோரிக்கை

0
4250

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது வெற்றிகரமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பெங்களூர் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

இப்போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய யாதவ் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 156.7 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட ஒரு பந்து, ஐபிஎல் வரலாற்றில் நான்காவதாக வீசப்பட்ட ஒரு வேகப்பந்துவீச்சாகவும் இது அமைந்தது. இவரது அறிமுக போட்டியான பஞ்சாப் அணிக்கு எதிராகவும் நான்கு ஓர்கள் பந்துவீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் இருப்பினும், இவர் ரன்களை வாரி வழங்காமல் துல்லியமான லைன் அண்ட் லெந்தில் வீசுவது கிரிக்கெட் வல்லுனர்கள் இவர் மீது கவனம் செலுத்த முக்கிய காரணமாக அமைந்தது. லக்னோ அணி இவரை கடந்த ஆண்டிலேயே ஏலத்தில் எடுத்து விட்டது. ஆனால் காயம் காரணமாக கடந்த சீசன் இவரால் விளையாட முடியவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஒப்பந்த பட்டியல்

இருப்பினும் இந்த சீசனில் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத இவர், இரண்டாவது போட்டியில் தன்னை நிரூபித்து வெற்றி நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அதிவேக பந்துவீச்சால் பெரிதும் கவரப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் முன்னால் வேகப்பந்து பேச்சாளர் இயான் பிஷப் இவருக்கு வேகப்பந்து வீச்சு ஒப்பந்தத்தை பிசிசிஐ உடனடியாக வழங்க வேண்டும் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது

- Advertisement -

“வேகப்பந்து வீச்சு ஒப்பந்த பட்டியலில் ஆறாவதாக மயங்க் யாதவின் பெயரை சேர்க்க பிசிசிஐ வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை” என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பிசிசிஐயின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் ஆகாஷ் தீப், விஜயகுமார் வைசாக், உம்ரான் மாலிக், யாஷ் தயால், வித்வாத் கவேரப்பா ஆகியோர் ஏற்கனவே இருக்கின்ற வேளையில், மயங்க் யாதவின் பெயரையும் ஆறாவதாக சேர்க்க வேண்டும்” என்று இயான் பிஷப் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ருதுராஜ் கேப்டனா நிரூபிச்சிட்டாரு.. நேத்து இந்த 3 விஷயம் உண்மையிலேயே செம – கவாஸ்கர் பாராட்டு

முன்பாக வேகப்பந்துவீச்சு துறைக்கு பிசிசிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய பிஷப் “வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களை வழங்கி வரும் இந்தியாவின் புதுமையான நடவடிக்கை கவரும் வகையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக உம்ரன் மாலிக்கின் பெயரை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பும் எந்த ஒரு அணியும் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.