இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்.. ஜெயசூர்யாவுடன் கைகோர்க்கும் ஃபாரின் லெஜன்ட்.. இலங்கை மாஸ்டர் பிளான்

0
13
Jayasuriya

இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நிலையில் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் அதிரடியாக இங்கிலாந்தை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு சிறப்பான திட்டத்தை தீட்டி இருக்கிறது.இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நிலையில் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் அதிரடியாக இங்கிலாந்தை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு சிறப்பான திட்டத்தை தீட்டி இருக்கிறது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த பிறகு, இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு புத்திசாலித்தனமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் உயர் செயல் திறன் இயக்குனர் ஜூபின் பருச்சாவை வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 27 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்காக இடைக்கால பயிற்சியாளராக ஜெயசூர்யாவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் சாய்ப்பதற்காக, இங்கிலாந்து லெஜெண்ட் பேட்ஸ்மேன் இயான் பெல்லை இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. இவர் சனத் ஜெயசூர்யாவுடன் இணைந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வேலை செய்வார்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் “இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து நுண்ணறிவுகள் கொண்டு நமக்கு உதவக்கூடிய ஒருவர் தேவைப்படுகிறார். இதன் காரணமாக நாம் இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் பெல்லை பேட்டிங் ஆலோசகராக நியமித்திருக்கிறோம். அவருக்கு இங்கிலாந்தில் நிறைய விளையாடி இருக்கும் அனுபவம் இருக்கிறது. அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எதுக்காகவும் கோலி கூட பாபரை கம்பேர் பண்ணாதிங்க.. பாக் பத்திரிக்கையாளரிடம் சல்மான் பட் விவாதம்

இயான் பெல் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் இங்கிலாந்து அண்டர் 19 ஆண்கள் அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும் ஆஸ்திரேலியா பிக்பேஸ் மற்றும் இங்கிலாந்தின் 100 பந்து போட்டிகளில் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். ஒட்டுமொத்தமாக அவருக்கு பயிற்சியாளராக நல்ல அனுபவம் ஓய்வு பெற்றதற்கு பிறகு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!