எதுக்காகவும் கோலி கூட பாபரை கம்பேர் பண்ணாதிங்க.. பாக் பத்திரிக்கையாளரிடம் சல்மான் பட் விவாதம்

0
116
Salman

பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கேப்டன் பாபர் அசாம் தற்போது சரியான பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய இந்த நிலை குறித்து விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என பாகிஸ்தான் பத்திரிக்கையாளரிடம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விவாதத்தில் கூறியிருக்கிறார்.

விராட் கோலி 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் வரையில் ஒரு சதம் கூட அடிக்காமல் பெரிய பேட்டிங் சர்வீஸ் இருந்து வந்தார். கடைசியாக அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பிறகு ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து திரும்பி வந்தார்.

- Advertisement -

மிகச் சரியாக எடுத்துக் கொண்டால் விராட் கோலி திரும்பி வந்த காலம் முதலே பாபர் அசாமுக்கு பேட்டிங் சரிவு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டது. விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் சுமாராக இருந்த காலகட்டத்தில் இனி பாபர் அசாம் காலம்தான் என பரவலாக கிரிக்கெட் உள்ளவர்கள் பேசப்பட்டது.

இப்படியான நிலையில்தான் அவர் இதற்கு அடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பை மற்றும், 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என மூன்று உலகக் கோப்பைகளில் சரிவர விளையாட முடியாமல் திணறி வருகிறார். மேலும் அவருடைய தலைமை பொறுப்பும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதுகுறித்து பேசி இருக்கும் சல்மான் கூறும் பொழுது “நீங்கள் பாபர் அசாமை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால் அவர் தொடர்ந்து ரன்கள் குறித்து வந்தார். தற்போது அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என்பதும், அவருடைய கேப்டன் பொறுப்பு பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதும் அவருக்கு வெளிப்படையாக அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் இந்த அழுத்தத்தை அவர் மிகச் சிறப்பான முறையில் கையாண்டு மீண்டு வருவார். அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று விவாதத்தில் கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா ஆஸி டெஸ்ட்.. 3-1 என இந்த அணி கைப்பற்றும்.. இவங்களுக்கு எதிரா சொல்ல விரும்பல – ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்த விவாதத்தில் இருந்து பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் விராட் கோலியின் பேட்டிங் சரிவுடன் தற்போது பாபர் அசாமை ஒப்பிட்டு பேசினார். இதில் குறிப்பிட்ட சல்மான் பேட் எதற்காகவும் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடக் கூடாது என மிகவும் கண்டிப்பாக கூறினார். பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட பேட்டிங் சரிவு போலானது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம், மற்றபடி அவருடன் பாபரை ஒப்பிட கூடாது என உறுதியாகச் சொல்லிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.