இந்திய அணிக்கு தேர்வாளராகும் வாய்ப்பு கிடைத்தால் இந்த தமிழக வீரரை 2022 உலகக் கோப்பை டி20 தொடருக்கு தேர்ந்தெடுப்பேன் – ஹர்பஜன் சிங்

0
478

நடப்பு ஐபிஎல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் 274 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 68.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 200.00 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 12 இன்னிங்ஸ்களில் இவர் எட்டு முறை நாட் அவுட் ஆகாமல் கடைசிவரை விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் போது கோப்பை டி20 தொடரில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

நான் தேர்வாளராக இருந்தால் நிச்சயம் கார்த்திகை தேர்ந்தெடுப்பேன்

நடப்பு ஐபிஎல் தொடரில் பினிஷர்கள் மத்தியில் மிக சிறப்பாக விளையாடி வரும் வீரர் யார் என்று கேட்டால் அது நிச்சயம் தினேஷ் கார்த்திக் தான். அவருடைய ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. ஆஃப் சைடை தாண்டி லெக் சைடில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். எல்லா வகையான ஷாட்டும் அவருக்கு அத்துபடி என்றும் ஹர்பஜன்சிங் பாராட்டியுள்ளார்.

நான் மட்டும் இந்திய அணிக்கு தேர்வாளராக இருந்தால் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் அவரை நிச்சயம் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார். இந்திய அணிக்கு அவர் மற்றும் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த காம்பினேஷன் ஆக இருப்பார்கள். கடைசி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை இவர்கள் இருவராலும் வெளிப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏபி டிவிலியர்ஸ் இடத்தை அவர் நிரப்பியுள்ளார்

தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், “ஏபி டிவில்லியர்ஸ் சென்ற பிறகு அவரது இடத்தை தற்பொழுது தினேஷ் கார்த்திக் நிரப்பியுள்ளார். நிறைய போட்டியில் எங்களது அணியை இக்கட்டான நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவருடைய அனுபவம் மற்றும் நிதானம் ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

- Advertisement -

அவர் மட்டும் சிறப்பாக விளையாடாமல் அவருடன் இணைந்து விளையாடும் மேலும் பேட்ஸ்மேன்கள் ஆன சபாஷ் நதீம் மற்றும் மஹிபால் லோம்ரார் ஆகியோரையும் சிறப்பாக வழிநடத்தி, அவர்களையும் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாட வைத்திருக்கிறார். இவ்வாறு தினேஷ் கார்த்தி குறித்து தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பெருமையாக பேசி இருக்கிறார்