இந்திய அணியின் நட்சத்திர மூத்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல்.ராகுல் மூவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடாமல் சில வருடங்களாக இருந்து வருகிறார்கள்.
இதன் காரணமாக இந்திய டி20 அணியில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதில் துவக்க இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் பினிஷிங் இடத்தில் ரிங்கு சிங் இருவரும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதே வேளையில் திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, மிக முக்கியமாக சுப்மன் கில் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை வீணடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். இதன் காரணமாக மூன்றாவது துவக்க வீரர் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடங்கள் திறந்து இருக்கிறது.
இந்திய டி20 அணியில் துவக்க வீரராக ருதுராஜ் தற்காலத்தில் மிக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா வருவார் என்றால், மூன்றாவது துவக்க வீரராக ருத்ராஜ் போதுமானவர். ஏற்கனவே ஜெய்ஸ்வால் இருக்கிறார். இந்த நிலையில் கில்லை பரிசோதிக்க அவசியமே கிடையாது. தொடர்ச்சியாக ருத்ராஜ் மேல் முதலீடு செய்யலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வித்தியாசமாக யோசிக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “டி20 கிரிக்கெட் என வரும் பொழுது கில் உடைய நம்பர்கள் குறைவாக இருக்கிறது. அவர் ஒன்று இரண்டு போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடிக்கிறார். ஆனால் மீதி எல்லா போட்டிகளிலும் அவருடைய ரன் மிக மிக குறைவாக இருக்கிறது.
பவர் பிளேவில் இடது கை சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அவருக்கு ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக அவர் இப்படி இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களிடம் பவர் பிலேவில் சிக்கி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
திலக் வர்மா தன்னுடைய வாய்ப்புகளை இழக்கிறார். அவர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய மூன்றாவது இடம் இப்பொழுதும் விராட் கோலி வசம்தான் இருக்கிறது.
ஜிதேஷ் சர்மாவும் ஒரு வகையில் வாய்ப்புகளை தவற விட்டார். அவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்வதால் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் போன்றவர்கள் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தால் மாறும்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. கேஎல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இந்த இடத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!