“பாகிஸ்தான் திரும்ப இந்தியாவை ஜெயிச்சா இர்ஃபான் பதான் செஞ்சதுக்கு திருப்பி செய்வேன்!” – முகமது அமீர் காட்டம்!

0
4597
Amir

இந்தியாவின் தற்போது 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்திய அணி மும்பை மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிகவும் மோசமாக தோற்ற ஆப்கானிஸ்தான் அணி அதற்குப் பிறகு திரும்பி வந்து நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை டெல்லியில் வைத்து அபாரமாக வீழ்த்தியது.

இதற்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வெகு சுலபமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

மேலும் தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு எதிராக அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றது போலவே இலக்கை சேஸ் செய்து அபாரமாக வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை வென்று சென்னை மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அங்கு மைதானத்தில் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இர்பான் பதான் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் உடன் இணைந்து நடனம் ஆடினார்.

மேலும் அடுத்து ஆப்கானிஸ்தான் வெல்லும் பொழுது நடனமாடுவேன் என்று வாக்குறுதி அளித்து, அந்த அணி பங்களாதேஷ் அணியை வென்ற பொழுது ஸ்டுடியோவில் இருந்து நடனம் ஆடினார்.

இது அப்பொழுதே பாகிஸ்தான் தரப்பிலிருந்து விமர்சனம் செய்யப்பட்டது. கிரிக்கெட் வர்ணனையில் பொதுவாக இருக்கும் ஒருவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் முகமது அமீர் கூறும் பொழுது ” இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி இன்னொரு முறை எதிர்கொள்வதாக இருந்து, அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றபிறகு இர்பான் பதான் நடனமாடியதைப் போல நானும் ஆடுவேன்!” என்று கூறியிருக்கிறார்!