“5 வருடத்துக்கு முன்ன ஆஸ்திரேலிய கிரிக்கெட் செஞ்சதை மறக்க மாட்டேன்.. வினோதமானது” – வார்னர் கோபம்

0
108
Warner

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிக மோசமான சம்பவம் நடந்து மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கிய காலக்கட்டம்.

ஆஸ்திரேலியா அணி அந்த ஆண்டு ஸ்மித் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது.

- Advertisement -

அந்த சுற்றுப் பயணத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல முடிவை தரவில்லை. எனவே வெற்றியின் அழுத்தத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது.

இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் உப்புத் தாளை வைத்து பந்தை சேதப்படுத்தி ஜெயிப்பதற்காக செய்யக்கூடாத வேலையை ஆஸ்திரேலியா செய்ததை, தென் ஆப்பிரிக்கா ஒளிபரப்பு ஊடகம் கண்டுபிடித்து வெளியிட்டது.

இது அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானத்தை கொண்டு வந்தது. இதற்கு காரணமாக இருந்தார்கள் என்று கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர், பான் கிராப்ட் மூவரும் ஒரு வருடம் எந்த விதமான கிரிக்கெட் விளையாடவும் தடை விதிக்கப்பட்டார்கள்.

- Advertisement -

மேலும் இது மட்டும் இல்லாமல் டேவிட் வார்னருக்கு ஆயுட்காலம் முழுவதும் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ஆவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இந்தத் தடை பற்றி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை விளாசி இருக்கிறார்.

இது குறித்து டேவிட் வார்னர் கூறும்பொழுது ” கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? உண்மையில் பயிற்சியாளருக்கு அணிகள் நிறைய பொறுப்புகள் உண்டு. உண்மையில் எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ஐந்து வருடங்கள் ஆனபோதிலும் இதற்கு என்ன பதில் சொல்வது என்று இன்னும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

இப்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அனுமதித்தால் நான் ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாளராக முடியும். ஆனால் என்னால் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மட்டும் ஆக முடியாது. இது எப்படியான முடிவு என்று எனக்கு தெரியவில்லை. இது மிகவும் வினோதமான ஒன்று” என்று சாடி இருக்கிறார்.