கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் இருண்ட பகுதிக்குள் சென்று விட்டேன் – காயத்தில் இருந்து மீண்டு வந்த கதையை விளக்கிய ஜோப்ரா ஆர்ச்சர்

0
1398
Jofra Archer

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டிலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்கேற்று விளையாடினர். அதன் பின்னர் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால் மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி மே மாதம் முதல் அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது அறுவை சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

தற்பொழுது ஓய்வில் இருக்கும் அவர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்றும் காயத்தில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தார் என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -
எந்தவித உணர்ச்சியும் எனக்கு இல்லை

முழங்கையில் காயம் ஏற்பட்டதும் முதல் அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் எனக்கு எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை. சொல்லப்போனால் எந்தவித உணர்ச்சியும் எனக்கு இல்லை. என்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிந்துவிடப் போகிறது என்கிற பயமும் எனக்குள் எழுந்தது.

இருப்பினும் இரண்டாவது அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் தான் எனக்கு நம்பிக்கை வந்தது. மீண்டும் பழையபடி பந்துவீசவும் முடிந்தது. தற்பொழுது என்னுடைய கிரிக்கெட் கேரியர் குறித்து நம்பிக்கையாக இருக்கின்றேன். உடனடியாக விரைந்து விளையாடுவதை விட எந்தவித காயமும் இன்றி முழு உடற்தகுதியுடன் மீண்டு வரவே விரும்புகிறேன் என்று திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.

இருண்ட பகுதிக்குள் சென்று விட்டேன்

முதல் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் நான் ஒரு இருண்ட பகுதிக்குள் சென்று விட்டேன். அதிலிருந்து மீள எனக்கு நாட்கள் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது, மற்றவர்களுக்கும் இதே போல தான் இருக்கும் என்று.

- Advertisement -

அவர்களது வாழ்க்கையிலும் இது போல ஏதாவது கஷ்டங்கள் வரும் வேளையில், அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

டி20 தொடரில் களமிறங்கும் ஆர்ச்சர்

மே 26ஆம் தேதி சஸ்செக்ஸ் அணிக்காக டி20 பிளாஸ்ட் தொடரில் ஆர்ச்சர் மீண்டும் களம் இறங்க இருக்கிறார். அவருடைய கம்பேக் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் தற்போதே ஆவலாக இருக்கின்றனர். இதற்குப் பின்னர் மீண்டும் இங்கிலாந்து அணியில் சர்வதேச போட்டியில் முன்பு போல களமிறங்கி ஆர்ச்சர் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.