ஆட்ட நாயகன் விருதை வென்றும் 7 மாதங்களுக்கு நான் வெளியே உட்கார வைக்கப்பட்டேன் – தனக்கு நடந்த நிகழ்வை போட்டுடைத்த மனோஜ் திவாரி

0
146

இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தசாப்தத்திற்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். சுனில் கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் ஆகியோருக்குப் பின்னர் இந்திய அணியில் யார் நன்றாக விளையாட போவது என்கிற கேள்வி இருந்தது. ஆனால் அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே ராகுல் டிராவிட் சவுரவ் கங்குலி மற்றும் வீரேந்திர ஷேவாக் ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் எம்எஸ் தோனி ரோகித் சர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா என தற்பொழுது வந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நிறைய கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

இருப்பினும் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் திறமை இருந்தும் நிறைய நாட்கள் விளையாட முடியாத காரணத்தினால் அப்படியே காணாமல் போயிருக்கின்றனர். மனோஜ் திவாரி இந்திய அணியில் விளையாடினார் என்று சொன்னால் நிறைய பேர் நம்ப மாட்டார்கள்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாட தொடங்கியவர் தற்போது வரை மொத்தமாகவே 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். நல்ல திறமை இருந்தும் அவரால் நிறைய நாட்கள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. தற்பொழுது அவர் நம்மிடம் தனது மனதில் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

7 மாதங்கள் நான் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக என்னுடைய முதல் சர்வதேச சதத்தை அடித்து அந்த போட்டியில் எனக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இருப்பினும் அதற்கு அடுத்து 14 போட்டிகள் நான் வெளியே அமர்த்தப்பட்டேன். எனக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கவில்லை.

- Advertisement -

சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எனக்கு வாய்ப்பு வந்தது அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி 65 ரன்கள் குவித்து இருப்பினும் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக எனக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கவில்லை.ஒரு வீரர் ஆட்டநாயகன் விருது வென்று சுமார் 14 போட்டிகள் எந்தவித வாய்ப்பும் என்று வெளியே உட்கார்ந்து பெருமை என்னையே சேரும் என்று வேதனையுடன் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

தற்பொழுது உள்ள மேனேஜ்மென்ட் அன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

- Advertisement -

தற்பொழுது உள்ள இந்திய மேனேஜ்மென்ட் நிறைய வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கிறது. 45 போட்டிகளில் சுமாராக விளையாடினாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்துக்கொண்டு வருகிறது. இந்த இந்திய மேனேஜ்மென்ட் அன்று இருந்திருந்தால் நிச்சயமாக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கும் நானும் என்னுடைய முழு திறமையை நிரூபித்து நான் எப்படிப்பட்ட வீரர் என்பதை காட்டி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு ரிஷப் பண்ட் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்து வந்தது இருப்பினும் ராகுல் டிராவிட் அவர் மீது நம்பிக்கை வைத்து அவர் இந்திய அணியில் தொடர்ந்து பயணிப்பார் என்று உறுதி அளித்தார். இன்று பண்ட் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளார். ராகுல் டிராவிட் கீழ் நானும் விளையாடி இருந்தால் எனக்கும் நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.