தந்தை இறந்த செய்தியைக் கேட்டு நான் உடைந்து விட்டேன் ; அப்பாவுக்காக இதைச் செய்யுங்கள் எனக் கூறி ரவி சாஸ்திரி ஊக்கப்படுத்தினார் – சிராஜ்

0
79
Ravi Shastri and Mohammad Siraj

சமீப ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார் முகமது சிராஜ். கரந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் நகரத்தில் நடந்த டெஸ்டின் மூலம் இந்திய அணிக்கு சிராஜ் அறிமுகமானார். அதன்பிறகு காபா மைதானத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் தனது முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாக அமைந்தாலும் முகமத் சிராஜுக்கு அப்படி இருக்கவில்லை. காரணம் இந்த தொடர் தொடங்க சிறிது நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் சிராஜ் தன்னுடைய தந்தையை இழந்து இருந்தார்.

அப்போது பின்பற்றப்பட்ட மிகவும் கடினமான கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக, சிராஜால் இந்தியா திரும்பி தன்னுடைய தந்தைக்கு இறுதி மரியாதையை செய்ய முடியாமல் போனது. சிராஜின் கிரிக்கெட் கனவிற்கு அவருடைய தந்தையின் பங்கு மிகவும் அதிகமானது. அப்படிப்பட்ட தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் போனது சிராஜுக்கு மிகவும் வருத்தம் தரக்கூடிய விசயமாகும். இருந்தாலும் இந்த கடினமான காலத்தில் தனக்கு யார் ஆறுதல் வார்த்தைகள் கூறி தன்னை மீட்டது என்று சிராஜ் தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தந்தையின் மறைவு செய்தியைக் கேட்டு தான் மிகவும் உடைந்திருந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான் தன்னை ஆறுதல் படுத்தினார் என்று தற்போது சிராஜ் தெரிவித்துள்ளார். ரவிசாஸ்திரி பெண்ணிடம் உணவு தந்தை நீ டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் நினைத்திருப்பார் என்று கூறியதாகக் கூறினார். இதன் காரணமாகவே தான் இந்தியா திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்து தன்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் ஆடுவது பலருக்கு கனவாக இருந்த நிலையில் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். வருங்கால இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பதால் சிராஜ் அதில் முக்கிய பங்காற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.