“2018-ல் கோலிக்கு நெட் பவுலரா இருந்தேன்.. அப்ப அவர் செஞ்ச சம்பவத்தை பார்த்தப்ப..!” – ஹாரிஸ் ரவுப் வெளியிட்ட வியப்பான தகவல்!

0
2779
Rauf

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் விராட் கோலி விளையாடிய விதத்தை, உலகில் எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்!

குறிப்பிட்ட அந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை கட்டுக்குள் வைத்தது. ஆனால் திரும்பி வந்த பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மிரட்டி இந்திய அணியின் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தியது.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விராட் கோலி அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுத்துக் கொண்டு வந்து, இறுதி நேரத்தில் உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர்கள் என்று அப்பொழுது சொல்லப்பட்ட ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரது பந்து வீச்சையும் நொறுக்கி, இந்தியா அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

குறிப்பாக ஷார்ட் குட் லென்த்தில் ஹாரிஸ் கொஞ்சம் மெதுவாக வீசிய பந்தை, கிரிக்கெட் உலகத்தில் யாரும் அடிக்க முடியாத பகுதியான நேரான பக்கத்தில் விராட் கோலி அடித்த சிக்ஸர், இன்றளவும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத விசித்திரமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

ஹாரிஸ் ரவுப் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாடினார். அவர் கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துக் கொண்ட காலமாக ஆஸ்திரேலியாவே இருந்தது. இப்படி அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பொழுது 2018 மற்றும் 19ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்பொழுது இவர் இந்திய அணியின் நெட் பவுலராக இருந்தார்.

- Advertisement -

இந்த நினைவு குறித்து பேசிய அவர்
“நான் இந்திய அணியின் நெட் பவுலராக இருந்து விராட் கோலிக்கு பந்து வீசிய பொழுது, பந்து பேட்டில் எந்த இடத்தில் படும் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது போல் உணர்ந்தேன். அவர் மிகவும் கவனம் கொடுத்து விளையாடினார். அவருடைய செறிவுத்திறமை எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

நான் அவருக்கு நெட் பவுலராக இருந்த பொழுதிலும் கூட, அவருக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுவது போல்தான் இருந்தது. அவர் அந்த அளவிற்கு கட்டுப்பாடாகவும் தீவிரமாகவும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் ஏன் இவ்வளவு உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார் என்பதற்கான காரணம் அதுதான்!” என்று கூறியிருக்கிறார்!