நான் முதல்ல பேட்டிங் பண்ணதான் நினைச்சேன்; ஆனால் டீம் வேற மாதிரி நினைச்சது; கடைசில அவங்க தான் ஜெயிச்சாங்க – மகேந்திர சிங் தோனி!

0
23110
Dhoni

ஐபிஎல் 16வது சீசனில் ப்ளே ஆப்ஸ் செல்வதற்கான மிக முக்கியமான போட்டியில் சென்னையும் மும்பையும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் டாசில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

சென்னையை அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மும்பையை 138 ரன்களுக்கு மடக்கினார்கள்.

தொடர்ந்து விளையாடிய சென்னை பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி சென்னை அணிக்கு ஆறாவது வெற்றியை பெற்று தந்தார்கள்.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் 11 வது போட்டியில் ஆறாவது வெற்றியுடன் 13 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை சென்னை அணி பிடித்தது.

- Advertisement -

இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு அல்லது ஒன்றை வென்றால் கூட ப்ளே ஆப்ஸ் வாய்ப்பிற்கான சாத்தியங்கள் அதிக அளவில் சென்னை அணிக்கு இருக்கவே செய்கிறது.

வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ” ஒரு எளிமையான காரணத்தால் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது. பாயிண்ட்ஸ் டேபிள் நடுவில் குழப்பங்கள் இருக்கிறது. கடந்த சில ஆட்டங்களின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எனவே நாங்கள் வெற்றிக்கு பக்கத்தில் இருப்பது நல்லது.

டாசில் முடிவு எடுப்பதில் எனக்கு குழப்பம் இருந்தது. நான் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தேன். ஆனால் அணியின் சிந்தனைக்குழு முதலில் பந்து வீச வேண்டுமென்றது. காரணம் அவர்கள் மழையைப் பற்றி நினைத்தார்கள். நான் ஆடுகளம் இரண்டாவது பகுதியில் மிகவும் மெதுவாக மாறும் என்று நினைத்தேன்.

ஆனால் இறுதியில் பெரும்பான்மையானவர்கள் முதலில் பந்து வீச வேண்டும் என்று முடிவு எடுத்ததால், அதன்படியே நான் சென்றேன். ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் பிறகு உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம்.

நான் ஆரம்பத்தில் மழை வந்தாலும் ஆட்டத்தின் பெரும்பகுதி முடிந்திருக்கும் என்றும், மழை ஆட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் உறுதியாக நம்பினேன். ஆனால் கடைசியில் பெரும்பான்மை முடிவின் பக்கம்தான் செல்ல வேண்டியது இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!