“நான் அந்த ஆஸி பிளேயர விடக்கூடாதுனு நினைச்சேன்.. சூர்யா பாய்கிட்ட சொன்னேன்!” – இஷான் கிஷான் பேட்டி!

0
24290
Ishan

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி அடைந்த, அடுத்த மூன்று நாட்கள் கழித்து, உடனடியாக உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மோதியது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எளிமையாக வெல்ல வேண்டிய இடத்தில் இருந்து, இறுதியாக இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக 50 பந்துகளில் 110 ரன்கள் குவித்து கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 208 ரன்களை 20 ஓவர்களில் குவித்தது.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் சீக்கிரத்தில் வெளியேற, இஷாந்த் கிஷான் மற்றும், கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெல்ல வைத்தார்கள்.

ஆரம்பத்தில் இசான் கிஷான் பெகரண்டாப் வீசிய முதல் ஓவரை மெய்டன் செய்து, ஆஸ்திரேலியாவின் மற்ற பந்துவீச்சாளர்களை குறிவைத்து அடித்து, 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இஷான் கிஷான் கூறும்பொழுது “உலகக்கோப்பையில் நான் விளையாடாத பொழுது, ஒவ்வொரு பயிற்சியின்போதும், இப்போது என்ன முக்கியம்? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று நானே கேட்டுக் கொண்டேன்.

நான் வலைகளில் நிறைய பயிற்சி செய்தேன். விளையாட்டுக் குறித்து பயிற்சியாளர் உடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்வது மற்றும் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரை குறி வைத்து தாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினேன்.

நான் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால் லெக் ஸ்பின்னரை குறி வைக்க வேண்டும். 20 ஓவர்கள் விக்கட்டுக்கு பின்னால் நின்றதால் எனக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்.

எனவே நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது சூர்யா பாய் இடம் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர் சங்காவை நான் குறி வைத்து அடிக்க இருப்பதாக கூறினேன். ஏனென்றால் நாங்கள் பந்துக்கும் ரன்னுக்குமான வித்தியாசத்தை குறைக்க வேண்டும். பின்னால் வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய இடங்களை வைக்க முடியாது. அவர்கள் உள்ளே வந்த உடனேயே அடிக்க முடியாது!” என்று கூறியிருக்கிறார்!