இது மட்டும் நடந்துவிட்டால் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் – விராட் கோலி அதிரடிப் பேச்சு

0
6260
Virat Kohli

நடப்பு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் இரண்டு எதிர்பாராத சரிவுகள் உண்டாகி இருக்கிறது. ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் அணிகளான சென்னையும் மும்பையும் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து முதல் முறையாக ஒருசேர வெளியேறி இருக்கின்றன. அதேபோல் மும்பை, சென்னை, கொல்கத்தா அணிகள் மூன்றும் ஒரே சீசனின் முதல் முறையாக பிளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி சரிவை சந்தித்து இருக்கின்றன!

இன்னொரு புறம் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட்கோலியும், ரோகித் ஷர்மாவும் சரிவை சந்தித்து இருக்கிறார். விராட்கோலி 13 ஆட்டங்களில் 236 ரன்களையும், ரோகித் ஷர்மா 13 ஆட்டங்களில் 266 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்கள். இதில் விராட்கோலியின் பேட்டிங் சராசரி 2008 ஐ.பி.எல் சீசனிற்கு முதல் முறையாக இருபதுக்குக் கீழ் சரிந்திருக்கிறது. இந்தத் தொடரில் மூன்று முறை டக் அடித்திருக்கிறார். மூன்றும் கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதேவேளையில் ஐ.பி.எல் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாய் விராட்கோலி படைத்திருக்கும் சாதனைகள் பெரியது. 15 ஆண்டுகளாக ஒரே பிரான்ஸிஸைஸ் அணிக்காக ஆடும் உலகில் ஒரே வீரர் விராட்கோலிதான். அதேபோல் ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்ததும் அவர்தான். ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததம் அவர்தான். ஒரே ஐ.பி.எல் தொடரில் அதிக சதங்கள் அடித்ததும் அவர்தான்.

சமீபத்தில் தன் பேட்டிங் பார்ம் சரிந்துள்ளது தொடர்பாகப் பேசியுள்ள விராட்கோலி, அதில், “உண்மையில் நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டத்தில் இருக்கிறேன். களத்தில் நான் எப்படிச் செயல்படுகிறேன் என்பதில், என் தரத்தை, சுயமதிப்பை நான் பாப்பதில்லை. நான் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டேன். இது எனது பரிணாம வளர்ச்சியின் ஒருகட்டம். என்னிடம் பழைய டிரைவ் இல்லை என்று கூறுகிறார்கள். என் டிரைவின் தரம் குறையாது. அது குறைவதாய் இருந்தால் நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்!