நான் யாரையும் ஸ்லெட்ஜ்
செய்வதில்லை ; வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஸ்லெட்ஜ் சம்பவத்தை சொன்ன நவீன் உல் ஹக்!

0
176
Naveen

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் பெரிய வாக்குவாதத்தில் மைதானத்தின் நடுவில் ஈடுபட்டது மிகப்பெரிய பரபரப்பான சம்பவமாக அமைந்தது!

இந்தச் சம்பவத்திற்கு பின்னால் காரணமாக இருந்தவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்!

- Advertisement -

இவர் பேட்டிங் செய்ய வரும் பொழுது விராட் கோலி ஆடுகளத்தில் அங்கும் இங்கும் நடந்து ஆடுகளத்தை சேதம் செய்ததாக நடுவரிடம் புகார் சொல்ல, விராட் கோலி தன் ஷூவை காட்டி இதை வைத்து எப்படி சேதம் செய்ய முடியும் என்று கேட்டார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் விளையாடும் பொழுதே கடுமையான வாக்குவாதம் ஏற்பட அமித் மிஸ்ரா மற்றும் நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள்.

பின்பு ஆட்டம் முடிந்து கைக்குலுக்கிக் கொள்ளும் நிகழ்வின்போது விராட் கோலி நவீனிடம் ஏதோ பேச நவீன் விராட் கோலி இடம் எகிற மேக்ஸ்வெல் பிரித்து விட்டார்.

- Advertisement -

இந்த நேரத்தில் உள்ளே வந்த கம்பீர் விராட் கோலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட களம் பரபரப்பானது. தற்போது வரை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி, நவீன், கம்பீர் என இந்த யுத்தம் தொடர்கிறது.

இந்த நிலையில் நவீன் உல் ஹக் ஸ்லெட்ஜிங் சம்பந்தமாக தனது கருத்தை கூறியிருக்கிறார் ” நான் யாரையும் முன்கூட்டியே ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. என்னுடைய பழக்கம் அது கிடையாது.

ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியின் போது இப்படி ஒரு அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது. அப்பொழுது நான் பேட்டிங்கில் நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்தேன். சில்லி பாயிண்டில் பீல்டிங்கில் இருந்தவர் பேட்ஸ்மேனை பார்த்து பேசினார்.

அவர் பேசும் பொழுது ” இது கடைசி விக்கெட் இதை சீக்கிரம் எடுத்தால் எனக்கு வீட்டிற்கு போய் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூறினார். அவருக்கு அப்பொழுதுதான் புதிதாய் திருமணம் ஆகி இருந்தது!” என்று நகைச்சுவையாக இந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்!