“அஷ்வின் ஜடேஜாவை பார்த்து ஒரு மாற்றத்தை செஞ்சேன்.. அதுதான் வெற்றிக்கு காரணம்” – ஹார்ட்லி சுவாரசிய தகவல்

0
178
Ashwin

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கு சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு அனுபவ சுழற் பந்துவீச்சாளராக லீச் மட்டுமே இருக்கிறார். மற்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுமே அனுபவம் குறைவான இளையவர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் அறிமுகமாகிய டாம் ஹார்ட்லி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி போப்புக்கு அடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமான வீரராக இருக்கிறார்.

இவர் முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் கூட செய்யாமல் 131 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். அதே இரண்டாவது இன்னிங்ஸில் 26.2 ஓவர் பந்து வீசி, 5 மெய்டன் செய்து, 62 ரன்கள் மட்டுமே தந்து ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

இந்த வீரர் இங்கிலாந்து முதல் தர போட்டியில் மிகச் சிறந்த பந்துவீச்சாக ஐந்து விக்கெட் மட்டும்தான் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் இவருடைய முதல் சர்வதேச போட்டியிலேயே ஏழு விக்கெட் கைப்பற்றியது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் போல் இல்லாமல் ஒரு சிறிய மாற்றத்தை செய்து இரண்டாவது இன்னிங்ஸில் இவர் பந்து வீசியது தெளிவாக தெரிந்தது. மேலும் இவர் முதல் இன்னிங்ஸில் சரியாக பந்து வீசாத பொழுதும், கேப்டன் ஸ்டோக்ஸ் இவருக்கு தொடர்ந்து ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்து பேச வைத்தார்.

இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசி உள்ள டாம் ஹார்ட்லி “இது நம்ப முடியாதது. நான் நிலவுக்கு மேலே இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது. பந்து நன்றாக சுழலவில்லை என்று நினைத்தேன். பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் இருவரும் என்னை சுற்றி நிறைய நம்பிக்கையும் ஆதரவும் தந்தார்கள்.

போட்டியில் அந்த நாள் மோசமாக இருக்கிறதோ இல்லை நன்றாக இருக்கிறதோ ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் எப்பொழுதும் சூழ்நிலை ஒரே மாதிரி நன்றாகத்தான் இருக்கிறது. நான் மந்தமான ஒரு சூழ்நிலையையும் பார்க்கவில்லை. ஃபீல்டில் எப்பொழுது திரும்பிப் பார்த்தாலும் மிகச் சிறப்பாக இருந்தது. அதை நாங்கள் அப்படியே வாங்கிக் கொண்டோம்.

இதையும் படிங்க : “தோல்விக்கு பயப்படவே மாட்டேன்.. நான் செஞ்ச இதுதான் வெற்றிக்கு காரணம்?” – பென் ஸ்டோக்ஸ் மாஸ் பேட்டி

பேட்டிங் செய்யும்பொழுது ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. சில ரன்கள் வந்ததும் அது சரியாகிவிட்டது. இதேபோல் முதல் இன்னிங்ஸில் நான் கொஞ்சம் அதிக வேகத்தில் பந்து வீசி விட்டேன். பிறகு இதை உணர்ந்து எனது வேகத்தை குறைத்துக் கொண்டேன். மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பார்த்து பந்துவீச்சுக்கு கொஞ்சம் நேரம் களத்தில் ஒதுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறி இருக்கிறார்.