காபி ஆர்டர் செய்து அப்படியே விட்டுட்டு ஓடி வந்தேன்; ஒரே ஓவரில் 3 விக்கெட் விழுந்தா என்ன செய்றது? – ஆட்டநாயகன் அக்சர் படேல்!

0
11890
Axar Patel

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது!

முதலில் விளையாடிய டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ரன்கள் வந்தது. ஏழு ஓவர்கள் வரை இரண்டு விக்கட்டுகளை இழந்து கொஞ்சம் பலமாக இருந்த டெல்லி அணி, வாஷிங்டன் சுந்தர் வீசியை எட்டாவது ஓவரில் வார்னர், சர்பராஸ் கான், அமன் கான் என மூன்று விக்கெட்டுகளை ஒரே ஓவரில் இழந்து நெருக்கடியில் விழுந்தது.

- Advertisement -

பின்பு ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் கூட்டணி அமைத்து தலா 34 ரன்கள் இருவரும் எடுத்து டெல்லி அணியை கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டார்கள். இதன் மூலம் டெல்லி அணி 144 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் 49, கிளாசன் 31 ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாருடைய பங்களிப்பும் சராசரியாக கூட கிடைக்கவில்லை. இறுதியில் வந்த வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் பங்களிப்பை தந்த அக்சர் படேல் பந்துவீச்சிலும் நான்கு ஓவர்கள் பந்து வீசி 21 ரன் தந்து, மயங்க் அகர்வால் மற்றும் மார்க்ரம் என இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார். இந்த பங்களிப்புகளால் இவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற அக்சர் படேல் பேசும்பொழுது ” காபிக்கு ஆர்டர் செய்து கிளாசை அப்படியே விட்டு விட்டு பேட்டிங் செய்ய வந்தேன். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்டது. நானும் மனிஷ் பாண்டேவும் ஆட்டத்தை முடிந்தவரை ஆழமாக எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது. பந்து கொஞ்சம் மெதுவாக வந்தது. இதனால் நானும் குல்தீப்பும் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினேன். பேட்ஸ்மேன்களின் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது. ஆனால் மெதுவான பந்துகளில் விக்கட்டை பெறுவது மகிழ்ச்சியாக இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!