“நான் எப்பவும் போட்டிக்கு முன்னாடி ஆடுகளத்தை பார்க்க மாட்டேன்.. இதான் காரணம்!” – முகமது சமி சிறப்பு பேட்டி!

0
253
Shami

நடந்து முடிந்த பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி தேர்வு செய்யப்பட்டார்!

இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்தில் முதல் நான்கு போட்டிகளில் முகமது சமி விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

நான்காவது போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலில் காயமடைந்து காயம் சரியாக காரணத்தினால் தொடரை விட்டு வெளியேறியதால், மீதம் இருந்த எல்லா போட்டிகளிலும் முகமது சமி விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதில் அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் கைப்பற்றியது மிகச் சிறந்த பந்துவீச்சாக இந்திய கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பதிவானது.

- Advertisement -

முகமது சமி அப்ரைட் சீம் பந்துவீச்சில் தற்போது உலகத்தின் அதிசிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவருடைய பந்து ஆடுகளத்தில் மோதி என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்பது எந்த பேட்ஸ்மேன்னாலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதன் காரணமாக அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதை எந்த பேட்ஸ்மேனும் விரும்புவதில்லை. ஆடுகளத்தில் கொஞ்சம் ஏதாவது உயிர் இருந்தால் அத்தோடு எதிர் அணியின் கதை முடித்தது. இந்த நிலையில் முகமது சமி போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தை பரிசோதிக்க மாட்டார் என்கின்ற தகவலை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பொதுவாக பந்துவீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள். நான் எப்பொழுதும் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் பந்துவீசும் போதுதான் ஆடுகளம் எப்படி நடந்து கொள்கிறது என்று உங்களுக்கு தெரியும்.

இப்படி இருக்கும் பொழுது நமக்கு நாமே ஏன் அழுத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை எப்பொழுதும் எளிமையாக வைத்திருக்க வேண்டும். உங்களை நீங்கள் நிதானமாக வைத்திருந்தால் தான் உங்களால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது உலகக்கோப்பை தொடரின் முடிவுக்கு பின்னால் இந்திய அணியின் எல்லா முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்கள். நாளைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை!

- Advertisement -